உலக கோப்பையில் பாகிஸ்தானை ஊதி தள்ளும் இந்தியா… இளம் வீரரின் ஓபன் ஸ்டேட்மெண்ட்
மும்பை: நடப்பு உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானை இந்தியா எளிதாக வீழ்த்தும் என்று இந்திய வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் தெரிவித்து உள்ளார்.
இந்திய வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன்க்கு இந்த வருட ஐபிஎல் தொடர் ஜொலிக்கவில்லை. 29 வயது நிரம்பிய வருண் ஆரோன், இந்திய அணிக்காக 9 ஒருநாள் போட்டிகளில் ஆடியவர். உலக கோப்பை தொடர் வரும் 30ம் தேதி தொடங்க உள்ள நிலையில் அது குறித்தும், இந்தியா, பாகிஸ்தான் மோத உள்ள போட்டி குறித்தும் தமது கருத்தை வெளியிட்டுள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது:பாகிஸ்தான் அணியை விட நாம் தான் மிக சிறந்த அணி. நாம் பாகிஸ்தானை வீழ்த்துவோம். அந்த அளவு திறமை நம்மிடம் உள்ளது. இப்போது பாகிஸ்தான், இந்தியா போட்டிகளை போல இந்தியா, ஆஸ்திரேலியா போட்டிகள் பரம வைரியாக பார்க்கும் சூழல் உருவாகியுள்ளது.

நமது சகோதரர்கள்
அப்டிரி, கம்பீர் மோதல் குறித்து கருத்துக் கூற ஏதுமில்லை. புத்தகங்களில் உள்ள விஷயத்தை சுவாரஸ்யமாக்க சில விஷயங்கள் தேவைப்படுகிறது. பாகிஸ்தான் வீரர்களுடன் சுமூகமான உறவு இருக்கிறது. அவர்கள் நமது சகோதரர்கள். எனவே இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம். உலக கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படும் அணிகளில் இந்தியாவும் ஒன்று.

இந்தியா சாம்பியன்
சமபலம் வாய்ந்த அணி. பேட்டிங், பவுலிங் இரண்டிலும் அற்புதமான பார்மில் இருக்கிறது. இங்கிலாந்து உலக கோப்பை தொடரில், புவனேஷ்வர் குமாரின் ஸ்விங், பும்ராவின் கடைசி கட்ட ஓவர்கள், சமியின் வேகம் இந்திய அணிக்கு கைகொடுக்கும். இந்தியாவை போலவே பலம் வாய்ந்த கோப்பையை கைப்பற்றும் என்ற அணிகளில் இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் இருக்கின்றன.

தோனி வழிநடத்துவார்
மேற்கிந்திய தீவுகள் அணியும் கூட ஆச்சர்யங்களை அளிக்கலாம். ஏன் என்றால் கெயில் , ரசல் ஆகியோர் தற்போது நல்ல பார்மில் இருக்கின்றனர். தல தோனி இருக்கிறார். அணியை கீப்பராக நல்ல முறையில் வழிநடத்துவார். சிறந்த கேப்டனாக கோலி உள்ளார். எனவே நிச்சயம் இந்திய அணி உலக கோப்பையை வெல்லும் என்றார்.

விருப்பம்
இந்திய அணிக்காக 9 டெஸ்ட் மற்றும் 9 ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ள வருண் ஆரோன் விளையாடி இருக்கிறார். அண்மையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், நான் இந்திய அணிக்காக விளையாட விரும்புகிறேன். இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுப்பதே எனது விருப்பம் என்று கூறி இருக்கிறார். வருண் ஆரோன் கடைசியாக 2014ம் ஆண்டில் இலங்கைக்கு எதிராக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications