Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நாடு தான் முக்கியம்... உலக கோப்பையில் பாக். Vs இந்தியா கூடவே கூடாது... கொடி பிடிக்கும் கம்பீர்

மும்பை:உலக கோப்பை தொடரில், பாகிஸ்தானுடன், இந்தியா விளையாடக் கூடாது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர்.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. அதனால் இந்தியா, பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.

விளையாட வேண்டாம்

விளையாட வேண்டாம்

இதையடுத்து உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக் கூடாது என்று கோரிக்கை அதிகரித்தது. இது குறித்து முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கூறி இருப்பதாவது:

ஏற்று கொள்ள முடியாது

ஏற்று கொள்ள முடியாது

புல்வாமா தாக்குதல் சம்பவத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் எல்லா வகையிலான போட்டியிலும் விளையாடுவதை இந்திய கிரிக்கெட் வாரியம் தவிர்க்க வேண்டும்.

தவிர்க்க வேண்டும்

தவிர்க்க வேண்டும்

பாகிஸ்தான் அணியுடன் இறுதிப்போட்டியில் மோத வேண்டிய சூழ்நிலை வந்தால் கூட அந்த போட்டியையும் தவிர்க்க வேண்டும்.ஐசிசி உலக கோப்பையில் பாகிஸ்தானுடன் விளையாடுவதை தவிர்ப்பது இந்தியாவுக்கு கடினமானது.

நாடு தான் முக்கியம்

நாடு தான் முக்கியம்

ஆனால் ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடுவதை தவிர்க்க வேண்டும். பாகிஸ்தானுடன் விளையாடி 2 புள்ளிகள் கிடைப்பது முக்கியமல்ல. நாடு தான் முக்கியம், நமது ராணுவ வீரர்களின் உயிர் தான் முக்கியம் என்று அவர் கூறியுள்ளார்.

Story first published: Tuesday, March 19, 2019, 15:01 [IST]
Other articles published on Mar 19, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+