கோலி… சொன்னா கேளுங்க… 3வது வீரராக பேட் பண்ணுங்க… அலர்ட் கொடுக்கும் முன்னாள் வீரர்
டெல்லி:இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி 3வது இடத்தில் விளையாடுவது மிக சிறந்தது என முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜாகீர் கான் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் இரண்டு டி 20 போட்டிகள் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் தொடரில் பங்கேற்றுள்ளது. முதலில் நடைபெற்ற டி 20 தொடரை இந்திய அணி முழுமையாக இழந்த நிலையில் இரு அணிகள் இடையேயான ஒருநாள் தொடர் தற்பொழுது நடைபெற்று வருகிறது.
இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவில் இந்திய அணி இரண்டு போட்டியிலும், ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றிருந்த நிலையில் இரு அணிகள் இடையேயான 4வது ஒருநாள் மொகாலியில் நடைபெற்றது.

கோலி மாற்றினார்
அதில் தோனி ஓய்வளிக்கப்பட்டு அவருக்கு பதில் ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டார். அம்பதி ராயுடு அமர்த்தப்பட்டு அவருக்கு பதிலாக ராகுல் ஆட வைக்கப்பட்டார். அந்த ஆட்டத்தில் வழக்கமாக 3வதாக களமிறங்கும் கோலி ராகுலை இறங்க பணித்தார். ஆனால் ராகுலும் பெரிதாக சாதிக்கவில்லை.

இந்தியா தோல்வி
தொடர்ந்து இரண்டு போட்டிகளில் சதமடித்த கோலி மொகாலி போட்டியில் சொற்ப ரன்களுக்கு வெளியேறினார். இறுதி 10 ஓவர்களில் இந்திய அணி குறைவான ரன்களே அடித்ததால் 4வது போட்டியில் தோல்வியை தழுவியது.

ஜாகீர் கருத்து
இதற்காக பலரும் பலவித கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜாகீர் கான் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

பேட்ஸ்மென்கள் வேண்டும்
வழக்கமாக 3வது இடத்தில் இறங்கும் கோலி 4வது இடத்தில் இறங்கியது மிகவும் தவறான ஒன்று. துவக்க வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அதை தொடர்ந்து எடுத்து செல்ல நல்ல பேட்ஸ்மென்கள் வேண்டும்.

சரியானது அல்ல
ராகுல் நீண்ட இடைவேளைக்கு பின் தற்போது இறங்கியுள்ளார். அவரிடம் எதிர்பார்ப்பது சரியானது அல்ல என்று ஜாகீர் கான் கூறினார்.


Click it and Unblock the Notifications