Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

3 டி20, 5 ஒருநாள், 4 டெஸ்ட்.. இந்தியாவுடன் நீண்ட தொடரில் ஆட வரும் தென் ஆப்பிரிக்கா!

மும்பை: 3 டி20 போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டி மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வரும் செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம்வரை இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்ய உள்ளதாக இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

போட்டி அட்டவணைப்படி பார்த்தால், தென் ஆப்பிரிக்க கேப்டன் டிவில்லியர்ஸ் தனது 100வது டெஸ்ட் போட்டியை பெங்களூரில் ஆட உள்ளது தெளிவாகிறது.

India-South Africa 2015 series schedule announced; De Villiers' 100th Test in Bengaluru

போட்டி கால அட்டவணை:

செப்டம்பர் 29- டி20 பயிற்சி ஆட்டம்- டெல்லி.

அக்டோபர் 2- முதலாவது டி20 ஆட்டம்- தர்மசாலா.

அக்டோபர் 5- இரண்டாவது டி20 ஆட்டம்- கட்டாக்.

அக்டோபர் 8- மூன்றாவது டி20 ஆட்டம் - கொல்கத்தா.

அக்டோபர் 11- முதலாவது ஒருநாள் போட்டி- கான்பூர்.

அக்டோபர் 14- இரண்டாவது ஒருநாள் போட்டி- இந்தூர்.

அக்டோபர் 18- மூன்றாவது ஒருநாள் போட்டி - ராஜ்கோட்.

அக்டோபர் 22- நான்காவது ஒருநாள் போட்டி - சென்னை.

அக்டோபர் 15- ஐந்தாவது ஒருநாள் போட்டி- மும்பை.

அக்டோபர் 30-31ம் தேதிகளில் தென் ஆப்பிரிக்கா- மும்பை போர்ட் பிரசிடென்ட் அமிகள் இடையே பயிற்சி ஆட்டம் நடக்கிறது.

நவம்பர் 5 முதல் 9ம் தேதிவரை முதல் டெஸ்ட் போட்டி மொகாலியிலும், நவம்பர் 14 முதல் 18ம் தேதி வவரை, 2வது டெஸ்ட் பெங்களூருவிலும், நவம்பர் 25ம் தேதி முதல் 29ம் தேதிவரை மூன்றாவது டெஸ்ட் நாக்பூரிலும் நடைபெற உள்ளது. டிசம்பர் 3ம் தேதி முதல் 7ம் தேதிவரை 4வது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெற உள்ளது.

தென் ஆப்பிரிக்க அணி, இந்தியாவில் மேற்கொள்ள உள்ள மிக நீண்டகால சுற்றுப் பயணம் இதுதான். அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால், தென் ஆப்பிரிக்க கேப்டன் டிவில்லியர்ஸ், தனது 100வது டெஸ்ட்டை பெங்களூரில் ஆடுவார். ஐபிஎல் அணியில் அவர் பெங்களூருக்காக ஆடிவருவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, July 28, 2015, 11:26 [IST]
Other articles published on Jul 28, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+