பத்து வருஷத்துல செமத்தியான "சீரிஸ்" இதுதான்.. "மெய் சிலிர்க்கும்" ரவி சாஸ்திரி
மொஹாலி: கடந்த பத்து வருடங்களில் மிகச் சிறந்த டெஸ்ட் தொடர், இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான தொடராகத்தான் இருக்கும் என்று இந்திய அணியின் இயக்குநர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
டுவென்டி 20 தொடர், ஒரு நாள் தொடரை படு பரிதாபமாக பறி கொடுத்து விட்டு டெஸ்ட் தொடருக்கு இந்தியா வந்துள்ள நிலையில் இப்படிக் கூறியுள்ளார் சாஸ்திரி.
அதேசமயம். சமீப காலமாக வெளிநாட்டு டெஸ்ட் தொடர் எதையும் தென் ஆப்பிரி்க்கா இழந்ததில்லை என்பதை இந்திய வீரர்கள் மனதில் வைத்துக் கொண்டு எச்சரிக்கையுடன் ஆடுவது நல்லது.
டெஸ்ட் தொடர் குறித்து சாஸ்திரி அளித்துள்ள பேட்டி...

தரமான கிரிக்கெட்
இந்தியா - தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர் தரமான கிரிக்கெட்டை வழங்கும் என்பதை நம்பலாம். உள்ளூரில் உங்களது பலத்துடன் நீங்கள் ஆட வேண்டும். இந்தியா அதைச் செய்யும் என்று நம்புகிறேன்.

பிட்ச் விவகாரம்
உங்களது நாட்டில் நீங்கள் விளையாடும்போது உங்களுக்கேற்ற பிட்ச்சை எதிர்பார்ப்பது இயல்புதான். சில சமயங்களில் அது கிடைக்காமல் போய் விடுகிறது. எனவே எல்லாவற்றுக்கும் தயாராக இருக்க வேண்டியுள்ளது.

பொறுத்திருந்து பார்ப்போம்
ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்காவுக்குப் போகும்போது அங்கு முதல் நாளிலேயே பந்து திரும்பும் என எதிர்பார்க்க கூடாது. இங்கு எப்படி இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மிகச் சிறந்த தொடர்
இந்த தொடர் மிகச் சிறந்த தொடராக இருக்கும் என்பதி்ல் சந்தேகம் இல்லை. கடந்த 10 வருடத்தில் பார்த்திராத தொடராக இது இருக்கும். காரணம், கடந்த சில ஆண்டுகளாக தென் ஆப்பிரிக்கா சிறப்பாக ஆடி வருகிறது.

மும்பை பஞ்சாயத்து
மும்பை வாங்கடே மைதான பிட்ச் விவகாரம் வரலாறு. அதுகுறித்து இப்போது பேசத் தேவையில்லை. அதுகுறித்து நான் நிறையவே பேசி விட்டேன். புதிதா்க சொல்ல ஒன்றும் இல்லை என்றார் சாஸ்திரி.


Click it and Unblock the Notifications