மத்தளத்துக்கு மட்டுமல்ல… தென்னாப்பிரிக்காவுக்கும் இரண்டு பக்கமும் இடி!

By: SRIVIDHYA GOVINDARAJAN
தென் ஆப்ரிக்காவை இரண்டு பக்கமும் தெறிக்கவிடும் இந்தியா

டெல்லி: உரலுக்கு ஒரு பக்கம் இடின்னா, மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்று யார் சொல்லி வைத்தார்களோ, தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் நிலையும் தற்போது அதுபோலவே உள்ளது.

இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகள் தென்னாப்பிரிக்காவுக்கு சென்றுள்ளன. ஆடவர் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 2-1 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.

அதே நேரத்தில் 6 போட்டிகள் கொண்ட ஒருதினப் போட்டித் தொடரில் 4-1 என, முதல் முறையாக தென்னாப்பிரிக்க மண்ணில் தொடர் வெற்றியைப் பெற்றது.

 மகளிர் அணியின் அசத்தல்

மகளிர் அணியின் அசத்தல்

மறுபக்கம் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 ஒருதினப் போட்டித் தொடரை 2-1 என்று வென்றுள்ளது. அதற்கடுத்து 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் முதல் ஆட்டத்தில் வென்று 1-0 என முன்னிலையில் உள்ளது.

ஆண்கள், பெண்கள் அணி மோதுகின்றன

ஆண்கள், பெண்கள் அணி மோதுகின்றன

ஆடவர் அணி நாளை தனது 6வது ஒருதினப் போட்டியை விளையாட உள்ளது. அதே நேரத்தில் மகளிர் அணி 2-வது டி-20 போட்டியை விளையாட உள்ளது.

முழிபிதுங்க வைத்த அணிகள்

முழிபிதுங்க வைத்த அணிகள்

புருவப் போட்டியில் ஜெயிச்சது பிரியா வாரியரா, ரோஷன் அப்துல் ரஹூப்பா என பட்டிமன்றம் நடந்து கொண்டிருக்கையில், இரண்டு இந்திய அணிகளுமே, தென்னாப்பிரிக்க அணிகளை முழிப்பிதுங்க வைத்துள்ளன. அது நாளையும் தொடரும்.

மத்தளமான தென்னாப்பிரிக்கா

மத்தளமான தென்னாப்பிரிக்கா

ஆண்கள் அணியைப் பொருத்தவரை, மிகப் பெரிய தொடர் வெற்றி என்ற இலக்குடன் உள்ளது. மகளிர் அணி டி-20 தொடரையும் வெல்ல வேண்டும் என்ற துடிப்புடன் உள்ளது. அதனால், நாளை நடக்கும் போட்டிகளில் தென்னாப்பிரிக்காவுக்கு இரண்டு பக்கமும் செம இடி காத்திருக்கிறது.

Story first published: Thursday, February 15, 2018, 12:02 [IST]
Other articles published on Feb 15, 2018
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற