Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி உலககோப்பைக்கான இந்திய அணி நாளை அறிவிப்பு.. 15 பேர் கொண்ட வீரர்களை அறிவிக்கும் பிசிசிஐ

மும்பை : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்க உள்ளது.

இதற்கான அணியை அனைவரும் செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என ஐசிசி கெடு விதித்திருந்தது. இந்த நிலையில் பிசிசிஐ தேர்வு குழு நாளை அகார்கர் தலைமையில் கூடி உலகக் கோப்பை தொடர்கான அணியை அறிவிக்க உள்ளது.

India squad for 2023 ICC world cup might be announce tomorrow

இந்திய அணியில் காயத்திலிருந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு திரும்பிய ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல்ராகுல்,பும்ரா ஆகியோர் எப்படி செயல்பட போகிறார்கள் என்பதை பார்த்து அதன் பிறகு அணியை தேர்வு செய்யலாம் என பிசிசிஐ திட்டமிட்டு இருந்தது. இந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் தன்னுடைய உடல் தகுதியை நிரூபித்து விட்டார். இதே போன்று கே எல் ராகுலும் இன்று அவருக்கு நடத்தப்பட்ட இறுதி கட்ட பயிற்சியில் வெற்றி பெற்று விட்டார்.

பேட்டிங் ,பந்துவீச்சு, விக்கெட் கீப்பிங் என மூன்றிலும் அவர் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். இதனால் கே எல் ராகுல் இன்று இரவே இலங்கைக்கு புறப்பட்டு செல்ல இருக்கிறார். இந்த நிலையில் 15 பேர் கொண்ட உலககோப்பைக்கான அணியில் கே எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் நிச்சயம் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக இசான் கிஷன் சிறப்பாக செயல்பட்டு இருப்பதால் அவருக்கும் நிச்சியம் அணியில் இடம் இருக்கும் என தெரிகிறது.

மேலும் கூடுதல் வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ள சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்குமா? இல்லை சூரியகுமார் யாதவருக்கு இடம் கிடைக்குமா என்பது தான் தற்போது சந்தேகமாக உள்ளது. இதேபோல் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சிறப்பாக செயல்பட்ட திலக் வர்மாவுக்கும் அணியில் இடம் கிடைக்காது எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய உத்தேச அணி : 1. ரோகித் சர்மா (கேப்டன்), 2, ஹர்திக் பாண்டியா ( துணை கேப்டன்), 3, விராட் கோலி, 4, சுப்மன் கில், 5, ஸ்ரேயாஸ் ஐயர், 6, கேஎல் ராகுல் ( விக்கெட் கீப்பர்), 7, இசான் கிஷன் ( விக்கெட் கீப்பர்), 8, ஜடேஜா, 9, குல்தீப் யாதவ், 10, அக்சர் பட்டேல், 11, பும்ரா, 12, முகமது ஷமி, 13, முகமது சிராஜ், 14, பிரசித் கிருஷ்ணா, 15, சூர்யகுமார் யாதவ் / திலக் வர்மா

Story first published: Monday, September 4, 2023, 16:22 [IST]
Other articles published on Sep 4, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+