Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஷமி, புவனேஷ்வர் குமாருக்கு இந்திய உலகக்கோப்பை அணியில் இடம்.. ரவி சாஸ்திரியின் 15 பேர் கொண்ட அணி

மும்பை: 2027 ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தேர்வு செய்துள்ளார். இதில் சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்களின் தேர்வில் அவர் சில ஆச்சரியமான முடிவுகளை எடுத்துள்ளார். முகமது ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கு வயதாகிவிட்டது என தேர்வுக் குழு ஒதுக்கி விட்ட நிலையில் அவர்களை உலகக்கோப்பை அணியில் சேர்க்க வேண்டும் என ரவி சாஸ்திரி கூறி இருக்கிறார்.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 2 - 1 என இழந்ததைத் தொடர்ந்து, அணியின் தேர்வு முறை மற்றும் வியூகங்கள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், 2027 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நீடிக்கிறார். இவருடன் பேட்டிங் வரிசையில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் மற்றும் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் ஆகியோரைத் தேர்வு செய்துள்ளார்.

India squad for 2027 ODI World Cup Mohammed Shami Bhuvneshwar Kumar picked by Ravi Shastri

ரவி சாஸ்திரியின் இந்த அணியில் மிக முக்கியமாக, நீண்ட நாட்களாக ஒருநாள் போட்டிகளில் விளையாடாமல் இருக்கும் அனுபவ வேகப்பந்து வீச்சாளர்களான முகமது ஷமி மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கு இடம் அளித்து இருக்கிறார். பெரிய தொடர்களில் அனுபவமே முக்கியம் என்று கூறி உள்ள ரவி சாஸ்திரி, இவர்களுடன் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரை வேகப்பந்து வீச்சுக்குத் தேர்வு செய்துள்ளார்.

ஆல்-ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகியோரையும், முதன்மை ஸ்பின்னராக குல்தீப் யாதவையும் தேர்வு செய்துள்ளார்.

ரவி சாஸ்திரி தேர்வு செய்துள்ள இந்த 15 பேர் கொண்ட அணியில் 10 வீரர்கள் ஏற்கனவே 2019 உலகக் கோப்பையில் விளையாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அக்சர் படேல் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவர் மட்டுமே இதுவரை ஒருநாள் போட்டி உலகக் கோப்பையில் விளையாடாத புதுமுகங்கள் ஆவர்.

இந்திய அணியில் ரோஹித், கோலியை தொடக்கூட முடியாது.. 2 காரணங்களை உடைத்த அஸ்வின். ஆனால் உண்மை என்ன?

இந்திய அணியில் ரோஹித், கோலியை தொடக்கூட முடியாது.. 2 காரணங்களை உடைத்த அஸ்வின். ஆனால் உண்மை என்ன?

ரவி சாஸ்திரி தேர்வு செய்த 15 பேர் கொண்ட இந்திய உலகக்கோப்பை அணி:

சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங்.

Story first published: Tuesday, July 21, 2026, 14:16 [IST]
Other articles published on Jul 21, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+