Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG 4வது டெஸ்ட்டில் 2 இந்திய வீரர்கள் நீக்கம்.. புதிதாக பவுலர் சேர்ப்பு.. பிசிசிஐ அறிவிப்பு

மான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான 'ஆண்டர்சன்-டெண்டுல்கர்' டெஸ்ட் தொடரின் மிக முக்கியமான நான்காவது போட்டிக்கு முன்னதாக 17 வீரர்கள் அடங்கிய இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் காயம் காரணமாக 4வது டெஸ்ட் போட்டியிலிருந்து நீக்கப்பட்டு உள்ளனர். இதை பிசிசிஐ உறுதி செய்துள்ளது. புதிதாக ஒரு வேகப் பந்துவீச்சாளர் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. தற்போது இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், தொடரை சமன் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி மான்செஸ்டரில் நான்காவது டெஸ்டில் களமிறங்குகிறது.

India squad for 4th Test vs England Test Arshdeep Singh Nitish Kumar dropped Anshul Kamboj added

முக்கிய வீரர்களுக்கு காயம்

இந்திய அணியின் இளம் ஆல் ரவுண்டரான நிதிஷ் குமார் ரெட்டிக்கு உடற்பயிற்சிக் கூடத்தில் ஏற்பட்ட இடது முழங்கால் காயம் காரணமாக, அவர் இந்தத் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் இருந்து முழுமையாக விலகியுள்ளார். அவரது முழங்காலில் தசைநார் கிழிந்து இருப்பது ஸ்கேன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக நாடு திரும்புவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங், வலைப்பயிற்சியின் போது பந்து தாக்கியதில் இடது கை கட்டை விரலில் காயம் அடைந்தார். இதனால் அவர் நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார். பிசிசிஐ மருத்துவக் குழு அவரது காயத்தை கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணிக்கு திரும்பிய அன்ஷுல் கம்போஜ்

காயமடைந்த அர்ஷ்தீப் சிங்கிற்கு பதிலாக, ஹரியானாவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் அன்ஷுல் கம்போஜ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் மான்செஸ்டரில் இந்திய அணியுடன் இணைந்துள்ளார் என்பதை பிசிசிஐ உறுதி செய்துள்ளது.

ஏற்கனவே, பர்மிங்காம் டெஸ்டில் சிறப்பாக செயல்பட்ட ஆகாஷ் தீப், காயம் காரணமாக இந்த போட்டியில் பங்கேற்பது சந்தேகமாகியுள்ள நிலையில், தற்போது மேலும் இரண்டு முக்கிய வீரர்கள் விலகியுள்ளது இந்திய அணிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது


நான்காவது டெஸ்டுக்கான இந்திய அணி:

  • சுப்மன் கில் (கேப்டன்)

  • ரிஷப் பண்ட் (துணை கேப்டன் & விக்கெட் கீப்பர்)

  • யஷஸ்வி ஜெய்ஸ்வால்

  • கே.எல். ராகுல்

  • சாய் சுதர்சன்

  • அபிமன்யு ஈஸ்வரன்

  • கருண் நாயர்

  • ரவீந்திர ஜடேஜா

  • துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்)

  • வாஷிங்டன் சுந்தர்

  • ஷர்துல் தாக்கூர்

  • ஜஸ்பிரித் பும்ரா

  • முகமது சிராஜ்

  • பிரசித் கிருஷ்ணா

  • ஆகாஷ் தீப்

  • குல்தீப் யாதவ்

  • அன்ஷுல் கம்போஜ்

Story first published: Monday, July 21, 2025, 13:02 [IST]
Other articles published on Jul 21, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+