Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SL - சஞ்சு சாம்சனுக்கு ஒருநாள் அணியில் வாய்ப்பில்லை.. சதம் அடித்த குட்டி யுவராஜூம் நீக்கம்

மும்பை : இலங்கை அணிக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த போட்டியில் கேரளாவை சேர்ந்த சஞ்சு சாம்சன் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார்.

ஏனென்றால் இந்திய அணி கடைசியாக விளையாடிய ஒரு நாள் போட்டியில் சஞ்சு சாம்சன் சதம் அடித்திருந்தார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடந்த டிசம்பர் மாதம் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தடுமாறிய போது சாம்சன் 108 ரன்கள் குவித்தார்.

ind vs sl india squad cricket vs sanju samson

இதில் ஆறு பவுண்டரி மூன்று சிக்சர்கள் அடங்கும். விராட் கோலி இடத்தில் களமிறங்கி அவர் இந்த சாதனையை படைத்தார். இதன் மூலம் இந்திய அணி அந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றது. இதனால் சஞ்சு சாம்சனுக்கு ஒரு நாள் அணியில் வாய்ப்பு கிடைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரை தேர்வு குழுவினர் அதிரடியாக நீக்கிருக்கிறார்கள்.

சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். எனினும் டி20 அணியில் சஞ்சு சாம்சன்,ரிஷப் பந்த் என இருவருமே உள்ளனர். இதனால் டி20 அணியில் பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைப்பது கடினம். ஆனால் ஒரு நாள் அணியில் பிளேயிங் லெவனில் அவர் இல்லை என்பது கூடுதல் தகவல்.

இதேபோன்று டி20 போட்டியில் குட்டி யுவராஜ் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட அபிஷேக் ஷர்மா நீக்கப்பட்டு இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியில் தன்னுடைய இரண்டாவது ஆட்டத்தில் அபிஷேக் ஷர்மா 47 பந்துகளில் சதம் அடித்து அசத்து இருந்தார்.

அந்த தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் அபிஷேக்சர்மா மூன்றாவது இடத்தில் இருந்தார். இந்த நிலையில் இலங்கைக்கு எதிரான டி20, ஒருநாள் போட்டிகளில் அபிஷேக் ஷர்மா இடம்பெறவில்லை. ஆனால் அந்த தொடரில் சரியாக செயல்படாத ரியான் பராக்கிற்கு மட்டும் இடம் கிடைத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Story first published: Thursday, July 18, 2024, 20:16 [IST]
Other articles published on Jul 18, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+