For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் - இந்திய அணி அறிவிப்பு.. ஆர்சிபி வீரருக்கு வாய்ப்பு

மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 6ஆம் தேதி லக்னோவில் முதல் போட்டியும், 9ஆம் தேதி ராஞ்சியில் 2வது ஒருநாள் போட்டியும், 11ஆம் தேதி மூன்றவது ஒருநாள் போட்டியும் நடைபெறுகிறது.

டி20 உலககோப்பைக்கான இந்திய அணி வரும் 6ஆம் தேதி ஆஸ்திரேலியா புறப்பட்டு செல்கிறது. இதனால், தென்னாப்பிரிக்க தொடரில் 2அம் தர அணியே அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்வரிசை வீரர்கள்

முன்வரிசை வீரர்கள்

இந்திய அணி கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார். இதே போன்று துணை கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இதே போன்று இளம் வீரர் சுப்மான் கில்லும் தேர்வாகி உள்ளார்.

ரஜத் பட்டிதார்

ரஜத் பட்டிதார்

இதே போன்று ஆர்சிபி வீரர் ரஜத் பட்டிதார் முதல் முறையாக இந்திய அணியில் தேர்வாகி உள்ளார். ஆர்சிபி அணிக்காக 8 இன்னிங்ஸ் விளையாடிய பட்டிதார் 333 ரன்களை அடித்து இருக்கிறார். இதனைத் தொடாந்து ரஞ்சி கோப்பை இறுதி ஆட்டத்திலும் சதம் விளாசி இருக்கிறார் பட்டிதார்.

வேகப்பந்துவீச்சாளர்

வேகப்பந்துவீச்சாளர்

உள்நாட்டு போட்டிகள், இந்திய ஏ அணி தொடரில் கலக்கிய வேக பந்துவீச்சாளர் முகேஷ் குமார் முதல் முறையாக இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இதே போன்று டி20 உலககோப்பை ரிசர்வ் அணியில் இடம்பெற்றுள்ள ரவி பிஸ்னாய், தீபக் சாஹர் ஆகியோர் தென்னாப்பிரிக்க தொடரிலும் விளையாடுகின்றனர்.

இந்திய அணி விவரம்

இந்திய அணி விவரம்

ஷிகர் தவான், ருத்துராஜ் கெய்க்வாட், சுப்மான் கில், ஸ்ரேயாஸ் ஐயர், ரஜத் பட்டிடார், ராகுல் திரிபாதி, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ஷாபாஸ் அகமது, சர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ரவி பிஸ்னாய், முகேஷ் குமார், ஆவேஷ் கான், முகமது சிராஜ், தீபக் சாஹர்

Story first published: Sunday, October 2, 2022, 19:45 [IST]
Other articles published on Oct 2, 2022
English summary
India squad for south Africa odi series 2022 தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் - இந்திய அணி அறிவிப்பு.. ஆர்சிபி வீரருக்கு வாய்ப்பு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+