Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SL - இந்திய ஒருநாள் அணி அறிவிப்பு.. கோலி, ரோகித்துக்கு இடம்.. தமிழக வீரருக்கு வாய்ப்பு

மும்பை : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. டி20 போட்டிகள் இம்மாதம் 28ஆம் தேதி ,29ஆம் தேதி, 31ஆம் தேதி நடைபெறும் நிலையில் ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி தொடங்குகிறது.

முதல் ஒருநாள் போட்டி ஆகஸ்ட் இரண்டாம் தேதி, இரண்டாவது ஒருநாள் போட்டி நான்காம் தேதி, மூன்றாவது ஒருநாள் போட்டி 7ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த மூன்று போட்டிகளுமே கொழும்பு நகரில் தான் நடைபெறுகிறது.

ind vs sl india squad cricket vs virat kohli

இந்த நிலையில் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா அறிவிக்கப்பட்டிருக்கிறார். ரோகித் சர்மா,விராட் கோலி போன்ற வீரர்கள் இலங்கை தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது கம்பீர் முதல் முறையாக பயிற்சியாக ஏற்ற பதவி ஏற்றிருப்பதால் இருவரும் அணிக்கு திரும்பிருக்கிறார்கள்.

ரோகித் சர்மா கேப்டன் ஆகவும், துணை கேப்டனாக கில்லும் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். விராட் கோலி, கேஎல் ராகுல்ரிஷபன்ட் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரும் பேட்ஸ்மேனாகவும் இடம்பெற்று இருக்கிறார்கள். வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக சிவம் துபே இடம் பிடித்திருக்கிறார். ஜடேஜாவுக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் தமிழக கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

இதேபோன்று பும்ராவும் இந்த தொடரில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக முகமது சிராஜ் ஆர்ஸ்தீப் சிங், கலீல் அகமத், ஹர்ஷித் ரானா ஆகியோர் ஒரு நாள் அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். இதேபோன்று சுழற் பந்துவீச்சாளராக குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல் ஆகியோர் இடம் பிடித்திருக்கிறார்கள்.

இதேபோன்று ஒரு நாள் அணியில் அறிமுகவீரராக ரியான் பராக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. t20 அணியில் இடம் பிடித்திருந்த ஹர்திக் பாண்டியா ஒரு நாள் போட்டிகளில் இடம்பெறவில்லை. இதேபோன்று முஹம்மது சாமி இலங்கை எதிரான தொடரில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கும் ஓய்வு வழங்கப்பட்டிருக்கிறது.

Story first published: Thursday, July 18, 2024, 19:53 [IST]
Other articles published on Jul 18, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+