Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இலங்கை தொடருக்கான இந்திய அணி.. எதிர்பார்க்காத 3 முக்கிய முடிவுகள்.. ரோகித், ஜடேஜா, பும்ரா நிலை என்ன?

மும்பை: இலங்கை அணியுடனான கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்கள் ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் நிலைமை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் மோதவுள்ளன. 2023ம் ஆண்டின் முதல் போட்டியாக இந்திய அணி டி20 கிரிக்கெட்டை விளையாடவுள்ளது.

3 டி20 போட்டிகளும் ஜனவரி 3, 5 மற்றும் 7ம் தேதிகளில் நடைபெறவுள்ளன. 3 ஒருநாள் போட்டிகள் ஜனவரி 10, 12, 15ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி

இந்திய அணி

இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படாமலேயே இருந்த சூழலில் இன்று வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. புதிய தேர்வுக்குழு இன்னும் நியமிக்கப்படாததால், சேட்டன் சர்மா தலைமையிலான பழைய குழுவையே வீரர்களை தேர்வு செய்யுமாறு கோரப்பட்டுள்ளது. அதன்படி பல முக்கிய முடிவுகளுடன் இன்று பட்டியல் வெளியாகும். குறிப்பாக ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, பும்ரா ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்புவார்களா? என்ற கேள்வி உள்ளது.

ரோகித்தின் காயம்

ரோகித்தின் காயம்

கேப்டன் ரோகித் சர்மா கையில் ஏற்பட்ட காயத்தின் தன்மை ஓரளவிற்கு சரியாகியிருப்பதாக தெரிகிறது. எனினும் அவரை உடனடியாக களத்திற்கு கொண்டு வந்து ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என தெரிகிறது. எனவே முதலில் நடக்கும் இலங்கை தொடரில் அவர் விளையாட மாட்டார் என்றும் உடற்தகுதியை பொறுத்து ஒருநாள் தொடரில் சேர்க்கப்படுவார் என்றும் தெரிகிறது.

ஜடேஜா நிலை

ஜடேஜா நிலை

ரவீந்திர ஜடேஜா கடந்த வங்கதேச சுற்றுப்பயணத்திலேயே விளையாடவிருந்தார். ஆனால் அவரின் காயத்தின் தன்மை அதிகமாக இருந்ததால் விலகிக்கொண்டார். இதே போல ஜஸ்பிரித் பும்ராவுக்கும் உடல்நிலை குறித்து தகவல் வெளியாகவில்லை இவர்கள் இருவரும் டி20 தொடரில் பங்கேற்க மாட்டார்கள். இந்த வாரம் நடைபெறும் உடற்தகுதி தேர்வை பொறுத்து ஒருநாள் தொடருக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

புதிய கேப்டன்

புதிய கேப்டன்

இந்த தொடரில் கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோருக்கும் ஓய்வு கொடுக்கப்படும் என கூறப்படுவதால் ஹர்திக் பாண்ட்யா தலைமையில் மீண்டும் ஒருமுறை இந்திய அணி களமிறங்கவுள்ளது. முழு நேர டி20 கேப்டனாகவும் அவர் இந்த தொடர் முதல் அறிவிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

Story first published: Tuesday, December 27, 2022, 10:40 [IST]
Other articles published on Dec 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+