Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. கேப்டனாக ஷிகர் தவான் நியமனம்.. சீனியர்களுக்கு ஓய்வு

மும்பை: வெஸ்ட் இண்டீஸுக்கு இம்மாத இறுதியில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி, 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இதற்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஷிகர் தவான் கேப்டனாகவும், ஜடேஜா துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா, பும்ரா, ரிஷப் பண்ட், முகமது ஷமி ஆகியோருக்கு பிசிசிஐ ஓய்வு அளித்துள்ளது.

மீண்டும் வாய்ப்பு

மீண்டும் வாய்ப்பு

இந்திய ஒருநாள் அணியில் சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு சுப்மான் கில் இடம்பெற்றுள்ளார். இதே போன்று அதிரடி வீரர் சஞ்சு சாம்சன், இஷான் கிஷனுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அயர்லாந்து தொடரில் கலக்கிய தீபக் ஹூடாவும் தனது இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளார். தொடர்ந்து சொதப்பி வரும் ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கும் மீண்டும் ஒரு முறை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

வேகப்பந்துவீச்சாளர்கள்

வேகப்பந்துவீச்சாளர்கள்

நடுவரிசையில் ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், அக்சர் பட்டேல்,ஆல்ரவுண்டர் சர்துல் தாக்கூருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.வேகப்பந்து பொறுத்தவரை ஆர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான்,. முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். சுழற்பந்துவீச்சாளர் சாஹலும் தனது இடத்தை பிடித்துள்ளார்.

தினேஷ் கார்த்திக் இல்லை

தினேஷ் கார்த்திக் இல்லை

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் வாய்ப்பு கிடைக்காத தினேஷ் கார்த்திக்கற்கு ஒருநாள் தொடரிலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஷிகர் தவானுக்கு தொடக்க ஜோடியாக இஷான் கிஷனும், மூன்றாவது வரிசையில் சுப்மான் கில் அல்லது ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended Video

England கேப்டன் Ben Stokes கொடுத்த Bold Statement
இந்திய அணி

இந்திய அணி

ஷிகர் தவான் (கேப்டன்),ஜடேஜா )துணை கேப்டன்).,சுப்மான் கில், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், ருத்துராஜ் கெய்க்வாட், தீபக் ஹூடா, அக்சர் பட்டேல், ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆர்ஷ்தீப் சிங், சாஹல், ஆவேஷ் கான்

Story first published: Wednesday, July 6, 2022, 16:46 [IST]
Other articles published on Jul 6, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+