Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள், டெஸ்ட் அணி.. முழு விவரம் இங்கே!

உலகக்கோப்பை தொடருக்கு பின் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் இந்திய அணி சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது. மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

இந்திய அணியின் கேப்டன் மாற்றப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், விராட் கோலி தொடர்ந்து கேப்டனாக நீடிக்கிறார்.

தோனி, பும்ரா இல்லை

தோனி, பும்ரா இல்லை

உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றவர்களில் பும்ராவுக்கு டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தோனி தாமாகவே இந்த தொடரில் இருந்து விலகி விட்டார். தினேஷ் கார்த்திக் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அஸ்வினுக்கு இடம்

அஸ்வினுக்கு இடம்

காயம் காரணமாக ஹர்திக் பண்டியா, விஜய் ஷங்கர் அணியில் சேர்க்கப்படவில்லை. தோனி இல்லாத நிலையில் ரிஷப் பந்த் ஒருநாள் மற்றும் டி20 அணியின் விக்கெட் கீப்பராக மாறி இருக்கிறார். டெஸ்ட் அணியில் அனுபவ வீரர் அஸ்வின் இடம் பெற்றுள்ளார். ஒருநாள் மற்றும் டி20 அணியில் பல இளம் வீரர்கள் வாய்ப்பு பெற்றுள்ளனர். முழு அணி விவரம் இதோ -

டி20 அணி

டி20 அணி வீரர்கள் - விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), க்ருனால் பண்டியா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்க்டன் சுந்தர், ராகுல் சாஹர், புவனேஸ்வர் குமார், கலீல் அஹ்மது, தீபக் சாஹர், நவ்தீப் சைனி.

ஒருநாள் போட்டிகள் அணி

ஒருநாள் அணி வீரர்கள் - விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், சாஹல், கேதார் ஜாதவ், முகமது ஷமி, புவனேஸ்வர் குமார், கலீல் அஹ்மது, நவ்தீப் சைனி.

டெஸ்ட் அணி

டெஸ்ட் அணி வீரர்கள் - விராட் கோலி (கேப்டன்), அஜின்க்யா ரஹானே (துணை கேப்டன்), மாயங்க் அகர்வால், ராகுல், புஜாரா, ஹனுமா விஹாரி, ரோஹித் சர்மா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), விரிதிமான் சாஹா (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, ஜஸ்ப்ரிட் பும்ரா, உமேஷ் யாதவ்.

Story first published: Sunday, July 21, 2019, 21:53 [IST]
Other articles published on Jul 21, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+