Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ருதுராஜ்க்கு ஆசையை காட்டி மோசம் செய்த பிசிசிஐ.. சஞ்சு சாம்சனையும் லிஸ்டில் சேர்க்கல

மும்பை : டி20 உலக கோப்பை தொடர் முடிவடைந்த பிறகு இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, பும்ரா, சூரியகுமார் யாதவ் போன்ற சீனியர் வீரர்கள் யாருமே இடம் பெறவில்லை. அதற்கு பதிலாக ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு இந்த தொடரில் பங்கேற்க பிசிசிஐ வாய்ப்பு வழங்க இருக்கிறது.

ind vs zim

இந்த நிலையில் இந்த தொடருக்கான கேப்டனாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் சுப்மன் கில் அறிவிக்கப்பட்டிருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. இதற்கு காரணம் இந்திய அணியின் அடுத்த கேப்டன்கள் பட்டியலில் கே எல் ராகுல், ஹர்திக் பாண்டியா,ரிஷப் பண்ட் போன்ற நபர்கள்தான் இருந்தார்கள். அவர்கள் இந்த அணியில் இடம்பெறவில்லை.

எனினும் இந்திய சீனியர் வீரர்கள் எப்போதெல்லாம் பங்கேற்கவில்லையோ அப்போது ஜூனியர் வீரர்களை பிசிசிஐ அனுப்பும்போது ருதுராஜ் தான் கேப்டனாக இருந்திருக்கிறார். அண்மையில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகள் கூட ருதுராஜ் தான் இந்திய அணியை வழிநடத்தி சென்றார். தற்போது சிஎஸ்கே அணியின் கேப்டனாகவும் ருதுராஜ் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

ஆனால் கில் கேப்டன்ஷிக்கு சரி இல்லை என ஐபிஎல் போட்டியிலே தெரிந்துவிட்டது.இந்த சூழ்நிலையில் ருதுராஜ்க்கு வாய்ப்பு வழங்காமல் சுப்மன் கில்லுக்கு பிசிசிஐ வாய்ப்பு வழங்கி இருக்கிறது. இது மிகப்பெரிய தவறான முடிவு என்று கிரிக்கெட் வல்லுனர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கில்லை விட ருதுராஜ் சரியான தேர்வாக இருப்பார் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இவ்விரு வீரர்களை விடவும் சஞ்சு சாம்சன் கேப்டனாக பல்வேறு அனுபவங்களை பெற்றிருந்த போதிலும் அவருக்கு வாய்ப்பு வழங்காமல் பிசிசிஐ அந்த பதவிக்கு அவருடைய பெயரை பரிசீலனையே செய்யவில்லை .

Story first published: Monday, June 24, 2024, 18:34 [IST]
Other articles published on Jun 24, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+