Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா - இலங்கை இதுவரை!

இந்தியாவும், இலங்கையும் இதுவரை 128 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் இந்தியா 67 போட்டிகளிலும், இலங்கை 50 போட்டிகளிலும் வென்றுள்ளன. 11 போட்டிகளில் முடிவு ஏற்படவில்லை.

1996 World Cup, India vs Sri Lanka

உலகக் கோப்பைப் போட்டத் தொடர்களில் இரு அணிகளும் 7 போட்டிகளில் சந்தித்துள்ளன. அதில் இந்தியா 2ல் மட்டுமே வென்றுள்ளது. அதேசமயம், இலங்கை 4 போட்டிகளில் வென்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவு ஏற்படவில்லை.

இரு அணிகளுக்கும் இது பத்தாவது உலகக் கோப்பைத் தொடராகும். இந்தியா 1983ம் ஆண்டு சாம்பியனானது. இலங்கை 1996ல் உலகக் கோப்பையை வென்றுள்ளது.

ஐசிசி தர வரிசையில் இந்தியா 2வது இடத்திலும், இலங்கை 3வது இடத்திலும் உள்ளன.

இறுதிச் சுற்றுக்குள் நுழைந்த விதம்:

இந்தியா

இந்தியா லீக் சுற்றில், வங்கதேசத்தை 87 ரன்களில் வீழ்த்தியது. இங்கிலாந்துடன் டை செய்தது. அயர்லாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. நெதர்லாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தென் ஆப்பிரிக்காவிடம் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. மேற்கு இந்தியத் தீவுகளை 80 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

காலிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா, அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 29 ரன்களில் வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.

இலங்கை

கனடாவை 210 ரன் வித்தியாசத்தில் வென்று, பாகிஸ்தானிடம் 11 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று, கென்யாவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, ஆஸ்திரேலியாவுடனான ஆட்டம் ரத்தாகி, ஜிம்பாப்வேயை 139 ரன்களில் வென்று, நியூசிலாந்தை 112 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது இலங்கை.

காலிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, அரையிறுதிக்குள் நுழைந்த இங்கிலாந்து அங்கு நியூசிலாந்து அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட்:சிறப்பு பக்கம்

உலக கோப்பை கிரிக்கெட்:படங்கள் India vs Srilanka

Story first published: Wednesday, December 7, 2011, 18:45 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+