2வது ஒரு நாள் போட்டியில் இந்தியா சிறப்பான பவுலிங்-இலங்கை தடுமாற்றம்

முத்தரப்புத் தொடரின் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்திடம் 200 ரன் வித்தியாசத்தில மோசமாக தோற்றது இந்தியா. இந்த நிலையில் இன்று தனது 2வது போட்டியில் இலங்கையுடன் மோதுகிறது.
பகலிரவுப் போட்டியான இதில் இலங்கை அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து இந்தியா பந்து வீசத் தொடங்கியது. ஆட்டத்தின் தொடக்கம் முதலே இந்தியாவின் பந்து வீச்சு நேர்த்தியாகவும், பீல்டிங் சிறப்பாகவும் இருந்ததால் இலங்கையால் ரன் குவிக்க முடியவில்லை.
தொடக்க ஆட்டக்காரர் தரங்கா முட்டையுடன் வெளியேறினார். பிரவீன் குமார் அவரை போல்ட் ஆக்கி அனுப்பி வைத்தார். தில்ஷான் மட்டும் தனித்துப் போராடி 45 ரன்கள் எடுத்தார். கேப்டன் சங்கக்காரா 2, ஜெயவர்த்தனே 4, சமரவீரா 7 என சொற்ப ரன்களில் வீழ்ந்ததால் இலங்கை தடுமாற்றத்தைக் கண்டது. மாத்யூஸ் 15 ரன்களில் வீழ இலங்கையின் ரன் குவிப்பு கிட்டத்தட்ட நின்று போனது.
24 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்களை இழந்து 86 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
இந்தியத் தரப்பில் பிரவீன் குமார் 2 விக்கெட்களையும், ஆசிஷ் நெஹ்ரா, பிரக்யான் ஓஜா, ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் சர்மா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:40 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications