கொழும்பு : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் இலங்கை அணி 50 ரன்களில் ஆட்டம் இழந்தது அந்நாட்டு ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.
பந்து ஸ்விங் ஆகும் நிலையில் இலங்கை வீரர்கள் பொறுப்பற்ற முறையில் விளையாடி தங்களது விக்கெட்டுகளை இழந்ததாக ரசிகர்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்கள்.

450 ஓவர் நடைபெறும் இந்த போட்டியில் இலங்கை அணி 15 புள்ளி இரண்டு ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. இதனால் இது டி20 போட்டியா இல்லை ஒரு நாள் போட்டியா என்ற அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் வந்திருக்கிறது. இந்த நிலையில் இலங்கை அணியின் இந்த மோசமான ஆட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ரவி சாஸ்திரி இது t20 யா இல்லை ஒரு நாள் போட்டியா என்பதை உணர்ந்து இலங்கை வீரர்கள் விளையாடியிருக்க வேண்டும்.
50 ஓவர் போட்டிகளில் உங்களுக்கு நிறைய பந்துகள் இருக்கிறது. டி20 போட்டியில் தான் நீங்கள் அவசரமாக ரன் குவிக்க வேண்டும் என்ற அவசரத்தில் விளையாட வேண்டும். ஒரு வீரர் துல்லியமாக பந்தை ஸ்விங் செய்து வீசினால் அதனை நீங்கள் ஏன் அடிக்கப் பார்க்கிறீர்கள்? ஆப் சைடுக்கு வெளியே செல்லும் பந்துகளை நீங்கள் விட வேண்டியது தானே. சிராஜ் வீசிய பந்துகளை எல்லாம் நீங்கள் அடிக்காமல் விட்டிருக்க வேண்டும்.
அதன் பிறகு அவர் உங்களை நோக்கி பந்து வீச செய்திருக்க வேண்டும். எப்போதுமே டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டில் யார் நன்றாக பந்து வீசுகிறார்களோ அவர்கள் ஓவர்களை மதித்து ஆட வேண்டும். மற்ற பந்துவீச்சாளர்களை அடித்து ஆடி இருக்க வேண்டும். ஆனால் இலங்கை தவறான ஒரு திட்டத்தை கையில் எடுத்து விளையாடி இருக்கிறது.
முதலில் ஆடுகளத்திற்கும் பந்துவீச்சுக்கும் மரியாதை கொடுத்து விளையாடுங்கள் என்று இலங்கை அணிக்கு ரவி சாஸ்திரி அறிவுரை வழங்கி இருக்கிறார். இதேபோன்று கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் வசீம் அக்ரம், இந்தப் போட்டியில் இலங்கை மோசமாக விளையாடியது என்று சொல்வதைவிட இந்தியா சிறப்பாக பந்து வீசியது என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் ஆடுகளம் ஒன்னும் அந்த அளவுக்கு பந்து வீச்சுக்கு சாதகமாக இல்லை. இதில் இந்தியா செயல்பட்டது பிரமிக்க தக்கதாக இருக்கிறது என்று பாராட்டினார்.