Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SL Final - ஆரம்பமே இந்தியாவுக்கு அதிர்ச்சி.. பாதகமாக விழுந்த டாஸ்.. தமிழக வீரருக்கு வாய்ப்பு

கொழும்பு : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டியில் இந்தியாவும் இலங்கையும் பலப்பரிட்சை நடத்துகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் சனக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார்.

இந்த தொடரில் கொழும்பில் நடைபெறும் ஆட்டத்தில் பெரும்பான்மையான போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்யும் அணியே வெற்றி பெறுகிறது. இதன் காரணமாக இது இந்தியாவுக்கு பாதகமான முடிவாக பார்க்கப்படுகிறது.

India srilanka match final - Dasun shanaka won the toss and choose to bat

இது குறித்து பேசிய சனாகா, ஆடுகளம் ரன் குவிப்புக்கு முதலில் சாதகமாக இருக்கும் என நினைக்கிறேன். கடந்த ஆண்டு இங்கு விளையாடும் போது அதிக மக்கள் வரவில்லை. ஆனால் இம்முறை அதிர்ஷ்டவசமாக நிறைய ரசிகர்கள் வந்திருக்கிறார்கள். மேலும் எங்கள் அணியில் உள்ள இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடுவதை பார்க்கும் போது மகிழ்ச்சி அளிக்கிறது.

இது நிச்சயம் நல்ல அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அது உலகக்கோப்பை தொடருக்கு முன் எங்களுக்கு ஒரு உத்வேகத்தை அளிக்கும். எங்களுடைய அணியில் இன்று தீக்சனா காயம் காரணமாக விளையாடவில்லை. அவருக்கு பதிலாக துசன் ஹேமன்ந்தா களமிறங்குகிறார் என்று கூறினார்.

இதனை தொடர்ந்து பேசிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, நாங்களும் முதலில் பேட்டிங் செய்ய தான் இருந்தோம். ஆடுகளம் மிகவும் காய்ந்த நிலையில் இருந்தது. இந்த ஆட்டத்தில் இலங்கை என்ன இலக்கு நிர்ணயிக்கிறதோ அதை சேசிங் செய்யும் வகையில் நம்பிக்கையுடன் களம் இறங்க வேண்டும்.

பந்துவீச்சில் முதலில் சிறப்பாக செயல்பட எங்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக பார்க்கிறோம். ஆடுகளம் நமக்கு என்ன தருகிறதோ அதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கடந்த போட்டியில் நாங்கள் வெற்றி அருகே வரை வந்தோம். 240 ரன்கள் வரை இலங்கை அணியை அடிக்கவிட்டால் அதனை எங்களால் துரத்த முடியும் என நினைக்கிறேன். இன்று எங்களுடைய பணி பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட வேண்டும்.

அதன் பிறகு பேட்டிங்கில் நாங்கள் என்ன செய்ய முடியும் என்று பார்க்க வேண்டும். கொழும்புவில் எங்களுக்கு ரசிகர்கள் அதிக அளவில் வந்து ஆதரவு கொடுத்தார்கள். இன்று ஒரு நல்ல இறுதிப் போட்டியாக அமையும் என நம்பிக்கை இருக்கிறது. எங்களுடைய அணியில் அக்சர் பட்டேலுக்கு காயம் ஏற்பட்டு இருக்கிறது. அவருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் அருகில் இணைந்திருக்கிறார் என்று ரோகித் சர்மா கூறினார்.

Story first published: Sunday, September 17, 2023, 15:00 [IST]
Other articles published on Sep 17, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+