Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜடேஜா.. உங்களுக்கு என்ன ஆச்சு.. கடைசி 7 இன்னிங்சில் 20 ரன்களை கூட தாண்டாத ஜடேஜா.. பெரிய குறை

மும்பை : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்று இலங்கையை இறுதிப்போட்டியில் எதிர்கொள்கிறது. இந்த நிலையில் உலககோப்பை தொடருக்கு இன்னும் 18 நாட்களை உள்ள நிலையில் இந்திய அணி தங்களுடைய இறுதி கட்ட பயிற்சியாக இந்த தொடரை கருதுகிறது.

இந்த நிலையில் இந்திய அணியின் முக்கியவீரராக கருதப்படும் ஜடேஜா திடீரென்று தடுமாறி வருவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரை ஐந்தாவது முறையாக கைப்பற்றியது என்றால் அதற்கு முக்கிய காரணம் நமது ஜடேஜா தான்.

India srilanka match final - R Jadeja poor batting performance is big minus for team india

ஜடேஜா தன்னுடைய பேட்டிங் மூலம் முக்கிய ரன்களை அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்துவார். ஆனால் கடந்த சில போட்டிகளாக ஜடேஜாவின் பேட்டிங் மிகவும் தடுமாறி வருகிறது. பந்து வீச்சில் கூட மிகப் பெரிய தாக்கத்தை ஜடேஜா ஏற்படுத்தவில்லை என்றாலும் அவருடைய பேட்டிங் இந்திய அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

ஏனென்றால் இந்திய அணியில் தற்போது இரண்டு ஆல்ரவுண்டர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். இதனால், இவர்கள் சிறப்பாக பேட்டிங் செய்தால் மட்டுமே அணியின் ஸ்கோர் நல்ல நிலைக்கு உயரமுடியும். கடந்த போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஜடேஜா வெறும் ஏழு ரன்கள் மட்டுமே பேட்டிங்கில் அடித்திருந்தார். அவர் மட்டும் கடைசி வரை நின்று இருந்தால் இந்திய அணி எளிதில் அந்த போட்டியில் வெற்றி பெற்றிருக்கும்.

ஜடேஜா கடைசியாக விளையாடிய 8 இன்னிங்ஸில் எத்தனை ரன்கள் அடித்திருக்கிறார் என்று பார்த்தாலே அவர் தடுமாறி வருவது நமக்கு புரியும். 16*, 10, 8*,14, 7 ஆகிய ரன்கள் தான் ஜடேஜா அடித்தது. இதில் இரண்டு முறை அவர் ஆட்டம் இழக்காமல் இருந்தார் என்பதால் அதனை கணக்கில் எடுத்துக் கொள்ள தேவையில்லை. எனினும் ஜடேஜா பேட்டிங்கில் தடுமாறுவது இந்திய அணிக்கு பெரிய தலைவலியை கொடுத்திருக்கிறது. இதனால் ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பையில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்றால் அதற்கு ஜடேஜாவின் பங்கு மிகவும் முக்கியமாகும்.

Story first published: Sunday, September 17, 2023, 14:52 [IST]
Other articles published on Sep 17, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+