கொழும்பு : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிரான சூப்பர் ஃபோர் லீக் சுற்று ஆட்டத்தில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று மிகப்பெரிய வெற்றியை இந்திய அணி வெற்ற நிலையில் இன்றைய ஆட்டத்தில் வென்றால் இறுதிச்சுற்றுக்கு முன்னேற அதிக வாய்ப்பு இருக்கிறது.

இந்த நிலையில் நேற்று பயன்படுத்தப்பட்ட ஆடுகளத்தை விட இன்று ஆடுகளம் வித்தியாசமாக இருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் இருக்கும் என கணிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் இந்திய அணியில் மூன்று ஸ்பின்னர்கள் இன்றைய ஆட்டத்தில் களமிறங்குகிறார்கள். தொடர்ந்து மூன்றாவது நாள் இந்திய அணி விளையாடுவதை டெஸ்ட் போட்டியுடன் ரவி சாஸ்திரி ஒப்பிட்டு பேச ரோகித் சர்மா அதற்கு சரியாக சொன்னீர்கள் என்று சிரித்தார்.
தொடர்ந்து பேசிய ரோஹித் சர்மா ஒரு விளையாட்டு வீரராக இதுபோன்ற சவால்களை நாங்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. நேற்று ஆட்டம் எங்களுக்கு முழு திருப்தியை அளித்தது. பேட்டிங், பந்துவீச்சு, பில்டிங் என மூன்றிலுமே நாங்கள் சிறப்பாக செயல்பட்டது பெருமை அளிக்கிறது. நேற்று ஆட்டம் முடிந்தவுடன் வீரர்கள் அனைவரும் முழு ஓய்வில் இருந்தும் இன்றைய ஆட்டத்திற்கு உடலளவில் நாங்கள் தயாராகி விட்டதாகவே கருதுகிறோம்.
கொழும்புவில் உள்ள ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக செயல்பட்டதை பார்த்தோம். இதனால் இன்றைய ஆட்டத்தில் சர்துல் தாக்கூருக்கு பதிலாக அக்சர் பட்டேலை பிளேயிங் லெவனில் சேர்த்திருக்கிறோம். இரவு நேரத்தை விட மதிய நேரத்தில் பேட்டிங் செய்வதற்கு எளிதாக இருக்கிறது. இதனால் ரன்குவித்து முதலில் நெருக்கடியில் ஏற்படுத்த நாங்கள் முயற்சி செய்வோம் என்று ரோகித் சர்மா கூறினார்.
இதனை தொடர்ந்து பேசிய இலங்கை அணி கேப்டன் சனக்கா நாங்களும் முதலில் பேட்டிங் செய்ய தான் இருந்தோம். எங்களை விட இந்தியா பலமான அணியாக இருக்கிறார்கள். இதனால் நாங்கள் நல்ல விளையாட்டை வெளிப்படுத்தினால் மட்டுமே எங்களால் வெற்றி பெற முடியும் எங்கள் அணியில் எந்த மாற்றமும் இல்லை என்று அவர் கூறினார்.