செயின்ட் லூசியா: இன்று நடைபெறும் முக்கியமான சூப்பர் எட்டு போட்டியில், இந்தியா இலங்கையை வென்றால் மட்டும் போதாது. மாறாக குறைந்தது 20 ரன் வித்தியாசத்தில் வென்றாக வேண்டும். அப்போதுதான் அரை இறுதி குறித்து நினைத்துப் பார்க்கலாம்.
சூப்ப்ர் எட்டு சுற்றின் முதல் இரு ஆட்டங்களிலும் இந்தியா தோற்றி விட்டது. இதனால் பெரும் நெருக்கடியாகியுள்ளது. இன்று நடைபெறும் தனது கடைசி சூப்பர் எட்டு போட்டியில் இலங்கையை சந்திக்கிறது.
இதில் இந்தியா கட்டாயம் வென்றாக வேண்டும். முதலில் பேட் செய்தால், இலங்கையை குறைந்தது 20 ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும். 2வதாக பேட்டிங் செய்தால், 2.1 ஓவர்கள் மீதமிருக்கும்போதே வென்றாக வேண்டும்.
இந்தியா வெல்வது மட்டுமல்லாமல், இன்று நடைபெறும் 2வது போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியை ஆஸ்திரேலியா வென்றாக வேண்டும்.
இலங்கையை நாம் மேற்கண்ட கணக்கின்படி வென்று, மேற்கு இந்தியத் தீவுகளை ஆஸ்திரேலியா ஒரு ரன் வித்தியாசத்தில் வென்றால் கூட அரை இறுதிக்குள் நாம் நுழைந்து விடமுடியும்.
தற்போது இந்தியாவின் ரன் ரேட் -1.578 ஆக உள்ளது. இலங்கையின் ரன் ரேட் -0.600 ஆகும். மேற்கு இந்தியத் தீவுகளின் ரன் ரேட் -1.057 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.