Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யாருக்கும் எங்களை நிரூபிக்க தேவையில்லை.. புது அத்தியாயம் தொடங்குகிறது.. ஹர்திக் பாண்டியா கருத்து

வெல்லிங்டன் : நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.

முதல் டி20 போட்டி வரும் 18ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு தொடங்குகிறது. இந்த தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி , ராகுல் உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் செய்தியாளர்களை ஹர்திக் பாண்டியா சந்தித்தார்.

பேச தான் செய்வாங்க

பேச தான் செய்வாங்க

அப்போது டி20 உலக கோப்பையில் அடைந்த தோல்வி குறித்தும், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹன், இந்திய அணியை செயல்படாத அணி என்று விமர்சித்தது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஹர்திக் பாண்டியா, நீங்கள் சரியாக விளையாடவில்லை என்றால் மக்கள் உங்களை குறித்து கருத்து தெரிவிக்க தான் செய்வார்கள்.

அவசியமில்லை

அவசியமில்லை

அவர்களுடைய கருத்தை மதிக்கிறேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கண்ணோட்டம் இருக்கும். சர்வதேச அளவில் விளையாடும் போது நாங்கள் யாருக்கும் எங்களை நிரூபிக்க அவசியமில்லை என நினைக்கிறேன். இது ஒரு விளையாட்டு, இதில் நீங்கள் சிறப்பாக செயல்பட முயற்சி செய்வீர்கள். அதற்கான முடிவுகள் நடக்கும் போது நிச்சயம் நடக்கும். நாங்கள் இன்னும் டி20 கிரிக்கெட்டில் சில விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

முன்னேறி செல்வோம்

முன்னேறி செல்வோம்

அதனை வருங்காலங்களில் சரி செய்து சிறப்பாக விளையாட முயற்சி செய்வோம். டி20 உலக கோப்பையில் அடைந்த தோல்வி எங்களுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. ஆனால் தொழில் முறை கிரிக்கெட் வீரராக இருக்கும் நீங்கள் அந்த ஏமாற்றத்தை தாங்கிக் கொண்டு அதில் இருந்து மீண்டு வந்து எப்படி வெற்றி அடைய வேண்டும் என்பது குறித்து தான் யோசிக்க வேண்டும் . முன்னேறிச் செல்வது மட்டும்தான் ஒரே வழி.தவறுகளை திருத்திக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம்.

2 ஆண்டுகள் இருக்கு

2 ஆண்டுகள் இருக்கு

அடுத்த டி20 உலக கோப்பைக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கிறது. இந்த இரண்டு ஆண்டுகளில் பல வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். அடுத்த டி20 உலக கோப்பைக்கான பயணம் நியூசிலாந்து தொடருடன் தொடங்குகிறது. இது ஒரு புதிய தொடக்கம். எங்களுக்கு இன்னும் நிறைய காலங்கள் இருக்கிறது.அதனால் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று அமர்ந்து பிறகு யோசிப்போம். இப்போது எங்களுடைய வீரர்கள் தங்களுடைய கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் விளையாட வேண்டும் என்பதே எனது விருப்ப.ம் எங்கள் அணியின் முக்கிய வீரர்கள் இந்த தொடரில் விளையாடவில்லை.

நல்ல வாய்ப்பு

நல்ல வாய்ப்பு

இதனால் பல இளம் வீரர்களுக்கு இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. சர்வதேச கிரிக்கெட்டில் அவர்கள் திறமையை வெளிக்காட்ட இது ஒரு நல்ல வாய்ப்பு. புதிய வீரர்கள் இடம் பெற்றுள்ளதால் அணியின் உத்வேகம் மேலும் அதிகரித்துள்ளது. அனைத்து தொடரும் மிகவும் முக்கியமானது தான். இதனால் நீங்கள் எந்த சர்வதேச போட்டியும் முக்கியமானது இல்லை என்று நினைத்து விளையாட முடியாது. இந்திய அணியில் தங்களது இடத்தை பிடிக்க இளைஞர்களுக்கு இந்த தொடர் சரியான வாய்ப்பாக அமையும் என நான் கருதுகிறேன்.

Story first published: Wednesday, November 16, 2022, 14:37 [IST]
Other articles published on Nov 16, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+