Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2022 ஆம் ஆண்டில் ரிஷப் பண்ட் புதிய சாதனை.. சச்சின் லெவலுக்கு கலக்கும் ரெக்கார்ட்.. முழு விவரம்

மும்பை: 2022 ஆம் ஆண்டில் ரிஷப் பந்த் இந்திய அணிக்காக பல்வேறு சாதனைகளை செய்துள்ளார்.

இதன் மூலம் 90களின் பிற்பகுதியில் சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்கு எப்படி இருந்தாரோ, அதேபோன்ற ஒரு பெருமையை ரிஷப் பண்ட் படைத்துள்ளார்.

நடப்பாண்டில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா பெரும்பாலான போட்டியில் காயம் காரணமாக விளையாடவில்லை.

அதிக ரன்கள்

அதிக ரன்கள்

முன்னாள் கேப்டன் விராட் கோலி ஃபார்ம் இல்லாமல் திணறி வருகிறார். இந்த நிலையில் தான் தமக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு ரிஷப் பண்ட் நடப்பாண்டில் இந்திய அணிக்காக பல்வேறு சாதனைகளை செய்துள்ளார். 2022 ஆம் ஆண்டில் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை ரிஷப் பண்ட் படைத்துள்ளார்.

டாப் 10

டாப் 10

ரிஷப் பண்ட் 26 இன்னிங்ஸில் விளையாடி ஒட்டுமொத்தமாக 988 ரன்களை அடித்துள்ளார். இதில் ஆறு அரை சதங்களும், 3 சதங்களும் அடங்கும். ஸ்ட்ரைக் ரேட் 98.21 என ரிஷப் பண்ட் வைத்துள்ளார். இதில் நடப்பாண்டில் அதிக ரன்கள் அடித்தவர்கள் டாப் 10 வரிசையில் ரிஷப் பண்ட்டின் ஸ்ட்ரைக் ரேட் தான் அதிகம்.

அதிக சிக்சர்

அதிக சிக்சர்

இதேபோன்று நடப்பாண்டில் இந்திய அணிக்காக அதிக பந்துகளை எதிர்கொண்டவர் என்ற பெருமையும் பண்ட் படைத்துள்ளார்.அவர் 1006 பந்துகளை எதிர்கொண்டுள்ளார். இதேபோன்று 2022 ஆம் ஆண்டில் அதிக சதம் விளாசிய இந்திய வீரர் என்ற பெருமையும் பண்ட் படைத்துள்ளார். 2022 ஆம் ஆண்டில் அதிக பவுண்டரி ,அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையும் படைத்துள்ளார்.

விக்கெட் கீப்பிங்

விக்கெட் கீப்பிங்

இதேபோன்று அதிக கேட்ச் அதிக ஸ்டம்பிங் என அனைத்து ரெக்கார்டும் நடப்பாண்டில் ரிஷப் பண்ட் தான் வைத்துள்ளார். இத்தனை சாதனைகளை படைத்த பண்ட், நடப்பாண்டில் அதிக டக்குகளை பெற்ற இந்திய வீரர் என்ற சோகமான சாதனையையும் வகித்து வருகிறார்.

24 வயதில் அசத்தல்

24 வயதில் அசத்தல்

இதேபோன்று 24 வயதில் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் சேஸிங்கின் போது அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற பட்டியலில் ரிஷப் பண்ட் எட்டாவது இடத்தில் உள்ளார். இங்கிலாந்தில் சேஸிங்கின் போது அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற பட்டியலில் ரிஷப் பண்ட் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

Story first published: Tuesday, July 19, 2022, 12:44 [IST]
Other articles published on Jul 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+