For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அந்த நொடிதான் போட்டி மாறியது.. கோலி கண் முன்னே நடந்த மாற்றம்.. வாயை பிளந்த சாஸ்திரி.. என்னாச்சு!

சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிராக இன்று காலையில் முதல் 10 ஓவருக்கு பின் மொத்தமாக போட்டியே மாறிவிட்டது.

இந்தியா இங்கிலாந்து அணிக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடந்து முடிந்துள்ளது உள்ளது. இந்திய அணி தோல்வியை தவிர்க்க கடுமையாக போராடியும் கடைசியில் இங்கிலாந்து வென்றுள்ளது .

கோலி மற்றும் அஸ்வின் இருவரும் இந்திய அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றுவதற்கு கடுமையாக போராடினார்கள். ஆனால் கோலி அவுட் ஆன பின் இந்திய அணி தோல்வியை நோக்கி சென்றது.

 போராட்டம்

போராட்டம்

இந்த போட்டியே இன்று காலைதான் மொத்தமாக மாறியது. இன்று காலை முதல் 10 ஓவர்கள் இந்திய அணிக்கு சாதகமாகவே இருந்தது. பிட்ச் இந்திய அணிக்கு சாதகமாகவே இருந்தது. ஆனால் போக போக பிட்ச் மாறியது.

இன்று எப்படி

இன்று எப்படி

இன்று காலை 10 ஓவர்கள் வீசப்பட்ட பின் பிட்ச் அப்படியே பவுலிங் செய்ய சாதகமாக மாறியது. பந்தும் பழைய பந்தானது. இதனால் பிட்ச் அப்படியே ரிவர்ஸ் ஸ்விங் ஆக தொடங்கியது. இந்திய அணி இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை .

பந்து ஸ்விங்

பந்து ஸ்விங்

பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆக தொடங்கியதில் இருந்தே பிட்ச் மோசமான இந்திய அணியை அச்சுறுத்த தொடங்கியது. புஜாரா இப்படிப்பட்ட பந்தில் திணறிய பின்தான் அவுட் ஆனார். இந்திய அணியில் புஜாரா, கோலி இரண்டு பேர் மட்டுமே ரிவர்ஸ் ஸ்விங்கில் எளிதாக ஆடுவார்கள். ஆனால் இன்று புஜாராவே அவுட்டாகிவிட்டார்.

ஷாக்

ஷாக்

இதன் பின் கோலி கடுமையாக ஷாக் ஆனார். பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆவதை பார்த்து பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் நிலைகுலைந்து போனார். இதில் இருந்துதான் ஆட்டம் மொத்தமாக இந்திய அணிக்கு எதிராக திரும்பியது.

கோலி கண் முன்னே

கோலி கண் முன்னே

கோலியின் கண் முன்னே வரிசையாக விக்கெட்டுகள் சரிய தொடங்கியது. கோலி மட்டுமே நிதானமாக ஆடி வந்தார். அதன்பின்பும் பிட்ச் இதேபோல் செயல்பட்டதால் இந்திய அணி வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது.

Story first published: Tuesday, February 9, 2021, 14:33 [IST]
Other articles published on Feb 9, 2021
English summary
India started loosing wickets after Ten overs today against England in Chennai.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+