4வது டெஸ்ட் வாழ்வா? சாவா? போட்டி..அசால்டாக ஆஸ்திரேலியா சாதிக்க வாய்ப்பு.. விட்டுக்கொடுக்குமா இந்தியா
அகமதாபாத்: இங்கிலாந்து வெளியேறினாலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குள் நுழைய இந்தியாவுக்கு மேலும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
டெஸ்ட் போட்டியையும் பிரபலபடுத்த வேண்டும் என்பதற்காக 2019ம் ஆண்டு முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப் போட்டியானது இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் வருகிற ஜூன் மாதத்தில் நடைபெறுகிறது.
இதில் இறுதிப்போட்டிக்கு ஏற்கனவே நியூசிலாந்து அணி சென்று விட்ட நிலையில், மற்றொரு அணியாக இந்திய அணி நுழைவதற்கான சாத்திய கூறுகள் பிராகசமாக உள்ளன. ஆனால் அடுத்த டெஸ்டின் முடிவை பொறுத்து ஆஸ்திரேலியாவுக்கும் சம வாய்ப்பு உள்ளது.

நியூசிலாந்து அணி
கடந்த 2 வருடங்களாக நடைபெற்று வரும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் நியூசிலாந்து அணி சமீபத்தில் மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான் அணிகளைத் தனது சொந்த மண்ணில் வீழ்த்தி, முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. மற்றொரு இடத்திற்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவியது.

வெளியேறியது இங்கிலாந்து
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குள் நுழைய இங்கிலாந்து அணி இந்தியாவுடனான தொடரில் 3 - 1 என்ற புள்ளிக்கணக்கில் வென்றிருக்க வேண்டும். ஆனால் ஏற்கனவே 2 போட்டிகளில் தோல்வியடைந்ததால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து இங்கிலாந்து வெளியேறியது.

பிரகாசமான வாய்ப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் 2-1 என இந்திய அணி முன்னிலையில் இருப்பதால் இன்னும் 3-1, 2 -1 என்ற ஏதோ ஒரு புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றால் போதும் இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிட முடியும்.

இந்தியாவுக்கு சிக்கல்
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் மூலம் ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டிக்கும் முன்னேற முடியும். ஏனெனில் இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியா உள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான தொடர் 2 - 2 என சமநிலையில் முடிந்தால் ஆஸ்திரேலியா இறுதி போட்டிக்கு செல்லும். எனவே அடுத்த போட்டியில் இந்தியா கண்டிப்பாக வெற்றி அல்லது சமன் செய்ய வேண்டும்.


Click it and Unblock the Notifications