Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

6 விக்கெட்டை இழந்து இந்தியா தவிப்பு... பாலோ-ஆனை தவிர்க்க போராட்டம்

சென்னை : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 578 ரன்களை குவித்துள்ளது.

தொடர்ந்து ஆடிவரும் இந்திய அணி 71 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்களை அடித்துள்ளது.

இந்நிலையில் பாலோ ஆனை தவிர்க்க இந்திய அணி போராடிக் கொண்டுள்ளது. இதை தவிர்க்க 378 ரன்களுக்கு அதிகமாக எடுக்க வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு உள்ளது.

3வது நாள் ஆட்டம்

3வது நாள் ஆட்டம்

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இரு அணிகளும் கடந்த 5ம் தேதி முதல் துவங்கி ஆடி வருகின்றன. 3வது நாளில் தனது முதல் இன்னிங்சை ஆடத் துவங்கியு இந்திய அணி 71 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 244 ரன்களை எடுத்துள்ளது. இந்தியாவின் துவக்க ஆட்டக்காரர்கள் சரியான துவக்கத்தை தரத் தவறியுள்ளனர்.

தவிர்க்க போராட்டம்

தவிர்க்க போராட்டம்

முதலில் ஆடிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 578 ரன்களை குவித்துள்ளது. இதையடுத்து பாலோ ஆனை தவிர்க்க இந்திய அணி போராடி வருகிறது. பாலோ ஆனை தவிர்க்க வேண்டுமென்றால் 378 ரன்களுக்கும் அதிகமான ஸ்கோரை இந்தியா எடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

இன்னிங்ஸ் வெற்றிக்கு தீவிரம்

இன்னிங்ஸ் வெற்றிக்கு தீவிரம்

இங்கிலாந்து அணி தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை ஆட விரும்பினாலும் பாலோ ஆன் தவிர்க்கப்படும். ஆனால் அந்த அணி சிறப்பான முதல் இன்னிங்சை ஆடி 578 ரன்களை குவித்துள்ளது. மேலும் இந்தியாவிற்கு எதிரான இன்னிங்ஸ் வெற்றியை பெறவே அந்த அணி முனைப்பு காட்டும் என்பதால் அதற்கு சாத்தியமில்லை.

ஸ்கோரை உயர்த்திய புஜாரா, பந்த்

ஸ்கோரை உயர்த்திய புஜாரா, பந்த்

இந்தியாவின் புஜாரா மற்றும் ரிஷப் பந்த் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்து 73க்கு 4 விக்கெட்டுகள் என்ற நிலையிலிருந்து இந்தியாவின் ஸ்கோரை 244க்கு உயர்த்தியுள்ளனர். ஆயினும் சொந்த மண்ணில் சிறப்பான போட்டியை தர வேண்டிய கட்டாயத்தில் உள்ள இந்திய அணி இந்த போட்டியை டிரா செய்யவாவது முயல வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

Story first published: Sunday, February 7, 2021, 18:48 [IST]
Other articles published on Feb 7, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+