பயிற்சி ஆட்டதிலேயே பஞ்சரான இந்திய அணி.. இங்கிலாந்து உள்ளூர் அணி மிரட்டல்.. திணறும் நட்சத்திரங்கள்
லெஸ்டர்: லெஸ்டர்சர் கவுண்டி அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி திணறி வருகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட 5வது டெஸ்ட் வரும் 1ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கு தயாராகும் விதமாக பயிற்சி ஆட்டத்தில் இந்தியா பங்கேற்கிறது.
இதில் இந்திய அணியின் ரிஷப் பண்ட், புஜாரா, பும்ரா, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் லெஸ்டர்சர் கவுண்டி அணிக்காக விளையாடி வருகின்றனர்.

பிட்ச் எப்படி?
ஆடுகளத்தில் புற்கள் அதிகளவில் இருந்தாலும், வெயில் அடிப்பதால், இது பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது. இருப்பினும் ஆட்டத்தின் சிறிது நேரம் பேந்து நன்றாக ஸ்விங் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் டாஸ் வென்ற ரோகத் சர்மா பேட்டிங் செய்வதாக தெரிவித்தார். கேஎல் ராகுல் இல்லாததால், அந்த இடத்திற்கு சுப்மான் கில் களமிறங்கினார்.

தொடக்கம் தடுமாற்றம்
சுப்மான் கில் அதிரடியாக விளையாட முற்பட்டு 28 பந்துகளில் 21 ரன்கள் அடித்தார். இதில் 4 பவுண்டரிகள் அடங்கும். இதனையடுத்து டேவிஸ் பந்துவீச்சில் ரிஷப் பண்ட் இடம் சுப்மான் கில் கேட்ச் ஆனார். மறுமுணையில் அதிரடியாக ஆட முற்பட்ட ரோகித் சர்மாவும், தவறுதலாக புல் ஷாட் ஆடி தனது விக்கெட்டை 25 ரன்களில் பறிக் கொடுத்தார்.

ஸ்ரேயாஸ் டக் அவுட்
புஜாரா எதிரணிக்கு விளையாடுவதால், இந்திய அணிக்காக 3வது வீரராக ஹனுமா விஹாரி களமிறக்கப்பட்டார். ஆனால் 23 பந்துகளை எதிர்கொண்ட அவர் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ஸ்ரேயாஸ் ஐயர் 4வது வரிசையில் களமிறங்கினார். இந்தியாவில் அதிரடி காட்டும், அவர் பந்து கொஞ்சம் பவுன்ஸ் மற்றும் ஸ்விங் ஆனதும் 11 பந்துகளை மட்டுமே தாக்குப் பிடித்து டக் அவுட் ஆனார்.

இந்தியா 90-5
இதனையடுத்து காயத்திலிருந்து குணமடைந்துள்ள ரவிந்திர ஜடேஜா பேட்டிங் செய்ய களத்துக்கு வந்தார். அதிரடியாக ஆட முற்பட்டு 2 பவுண்டரிகள் அடித்த ஜடேஜா 13 ரன்களில் ஆட்டமிழந்தார். விராட் கோலி மட்டும் பொறுமையாக 32 பந்துகளில் 9 ரன்கள் மட்டும் எடுத்தார். மதிய உணவு நேர இடைவேளையின் போது இந்திய அணி 90 ரன்கள் சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.


Click it and Unblock the Notifications