Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சரியும் இந்திய அணி விக்கெட்டுகள்.. ஆஸி.க்கு எதிரான 2வது டெஸ்டில் தடுமாற்றம்..லயான் அசத்தல் பவுலிங்

டெல்லி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி திணறி வருகிறது. முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றாலும் இரண்டாவது டெஸ்டில் நினைத்தபடியே ஆஸ்திரேலிய அணி ஆக்ரோஷமாக விளையாடி வருகிறது.

இந்தியாவின் ஃபார்முலாவை பயன்படுத்தி ஆஸ்திரேலிய அணி டெல்லி டெஸ்டில் மூன்று சுழற் பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியது.

இந்த முடிவு தற்போது அந்த அணிக்கு நல்ல பலனை தருகிறது. பொதுவாக இந்திய ஆடுகளங்களில் யார் முதல் இன்னிங்சில் அதிக ரன்களில் முன்னிலை பெறுகிறார்களோ அவர்கள் அந்த டெஸ்டில் வெற்றி பெற நல்ல வாய்ப்பு ஏற்படும்.

ஆஸி. அபாரம்

ஆஸி. அபாரம்

தற்போது ஆஸ்திரேலிய அணி டிரைவர் சீட்டில் அமர்ந்திருக்கிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் உஸ்மான் கவாஜா, பீட்டர் ஹன்ஸ்கோம்ப் ஆகியோர் அரை சதம் அடித்தனர். இதன் மூலம் அந்த அணி 263 ரன்கள் ஆட்டம் இழந்தது. இதனை அடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் விளையாடியது. வழக்கம் போல் ரோகித் சர்மா அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தார்.

சரிந்த விக்கெட்

சரிந்த விக்கெட்

எனினும் கே எல் ராகுல் 17 ரன்களில் ஃபெவிலின் திரும்ப இந்திய அணிக்கு சரிவை ஏற்படுத்தினார். இதனால் ஏற்பட்ட நெருக்கடியில் ரோகித் சர்மா 32 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த நிலையில் தனது 100வது டெஸ்ட் போட்டியில் சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட புஜாராவும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். அவர் லயான் பந்தில் டக் அவுட் ஆகி திரும்பினார் .

4 விக்கெட்டுகள்

4 விக்கெட்டுகள்

இதனை அடுத்து விராட் கோலி ஸ்ரேயாஸ் ஐயர் இணைந்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஸ்ரேயாஸ் 15 பந்துகளை எதிர் கொண்டு 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனால் இந்திய அணி 20 ரன்கள் இடைவெளியில் நான்கு விக்கெட்டுகளை இழந்தது. தற்போது களத்தில் விராட் கோலி ஜடேஜாவும் இணைந்து போராடி வருகின்றனர்.

தப்பிக்குமா இந்தியா

தப்பிக்குமா இந்தியா

ஆஸ்திரேலியா அணியின் அனுபவ பந்துவீச்சாளர் நாதன் லயான் 21 ரன்களை விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இந்திய அணி ஆஸ்திரேலியாவின் இலக்கின் அருகே சென்றால் மட்டுமே அவர்களால் வெற்றி பெற முடியும். இல்லையெனில் இந்த டெஸ்ட் ஆஸ்திரேலியா கையில் சென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் குறைந்த பட்சம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 200 ரன்களை தாண்டி அடிக்க வேண்டும். ஏனென்றால் கடைசி இன்னிங்ஸ் விளையாடுவது மிகவும் கடினம். தற்போது அனைத்தும் இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் முடிவில் இருக்கிறது.

Story first published: Saturday, February 18, 2023, 12:23 [IST]
Other articles published on Feb 18, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+