Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே கேட்ச்சால் மாறிய ஆட்டம்.. ஹகிபுல் ஹசன் ஓவரில் முக்கிய விக்கெட்டுகள் காலி.. தடுமாறிய தவான், கோலி

டாக்கா : வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி திணறி வருகிறது. ஆடுகளத்தில் ஈரப்பதம் அதிகமாக இருந்ததால் பந்து, பேட்டிற்கு வரவில்லை.

இதன் காரணமாக பேட்ஸ்மேன்கள், ரன் சேர்க்க திணறி வருகின்றனர். ஆடுகளத்தை சரியாக கணிக்காமல் இருந்த இந்திய வீரர்கள் அதிரடியாக விளையாட முற்பட்டு, தங்களது விக்கெட்டை இழந்தனர்.

ஆடுகளத்தின் தன்மையை கணித்து கொஞ்சம் பந்துகளை பிடித்த பிறகு, ரன்களை பேட்ஸ்மேன்கள் அடித்திருக்க வேண்டும்.

தவான் அவுட்

தவான் அவுட்

இந்திய அணியின் தொடக்க வீரர் இடத்திற்கு கடும் போட்டி நிலவி வருகிறது. பல இளம் வீரர்கள் வாய்ப்புக்காக காத்து வருகின்றனர். இதனை சரியாக புரிந்து கொள்ளாமல் தவான், வாய்ப்புகளை வீணடித்து வருகிறார் . 17 பந்துகளை எதிர் கொண்ட ஷிகர் தவான் 7 ரன்கள் எடுத்திருந்த போது தேவையில்லாத ஷாட் ஆடி ஆட்டமிழந்தார்.

 ரோகித் போல்ட்

ரோகித் போல்ட்

எனினும் கேப்டன் ரோகித் சர்மா, இன்று நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தார். ரோகித் சர்மா 31 பந்துகளை எதிர்கொண்டு 27 ரன்கள் சேர்த்தார். இதில் 4 பவுண்டரிகள், ஒரு சிக்சர்கள் அடங்கும். எனினும் ஷகிபுல் ஹசன் பந்துவீச்சை கணிக்க தவறிய ரோகித் சர்மா கிளீன் போல்ட் ஆனார். இதனையடுத்து, விராட் கோலி 15 பந்துகளில் 9 ரன்கள் எடுத்திருந்த போது, அதே ஓவரில் பெரிய ஷாட் ஆடினார்.

கோலி செம கேட்ச்

கோலி செம கேட்ச்

அப்போது கவர் திசையில் நின்று கொண்டிருந்த ஷகிபுல் ஹசன், பாய்ந்து கேட்ச் பிடித்தார். இது ஆட்டத்தில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்திய அணி 49 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து, கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

 ஸ்ரேயாஸ் குறை

ஸ்ரேயாஸ் குறை

ஸ்ரேயாஸ் ஐயா அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தார். எனினும் 24 ரன்கள் எடுத்திருந்த போது அவருடைய குறையான ஷாட் பாலை அடிக்க முயன்று கேட்ச் ஆனார்.இந்திய அணி 92 ரன்கள் சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. நல்ல வேலையாக இந்திய அணி இன்று 4 ஆல்ரவுண்டரை வைத்து விளையாடுகிறது.

Story first published: Sunday, December 4, 2022, 14:38 [IST]
Other articles published on Dec 4, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+