Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா தொடர்ந்து 3 தோல்விகள்.. இங்கிலாந்திடமும் வீழ்ந்து படுமோசமான நிலைக்குச் சென்றது

மாங் காங்: ஹாங்காங் சிக்ஸஸ் 2026 தொடரில் விளையாடிய 3 போட்டிகளிலுமே அடுத்தடுத்து தோல்வியடைந்து இந்திய அணி படுமோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. குரூப் சுற்றில் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகளிடம் வீழ்ந்த இந்தியா, ஆறுதல் கோப்பைக்கான 'பவுல்' பிரிவு அரையிறுதியிலும் இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தது.

குரூப் சுற்றில் கடைசி இடத்தைப் பிடித்ததால் 'பவுல்' பிரிவுக்குத் தள்ளப்பட்ட இந்திய அணி, குறைந்தபட்சம் இந்த ஆறுதல் கோப்பையையாவது வெல்லும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான 6 ஓவர் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 6 ஓவர்களில் 124 ரன்கள் குவித்தது.

India Suffer 3rd Straight Defeat in Hong Kong Sixes 2026 Lose Thriller to England in Bowl Semi-Final

பின்னர் 125 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி ஆடிய இந்திய வீரர்கள் இறுதிவரை போராடி அதிரடி காட்டினர். ராகுல் திரிபாதி 14 பந்துகளில் 56 ரன்கள் விளாசி மிரட்டினார். ஷஷாங்க் சிங் 9 பந்துகளில் 29 ரன்களும், கேப்டன் குருணால் பாண்டியா 7 பந்துகளில் 28 ரன்களும் சேர்த்தனர். எனினும் இந்திய அணியால் 6 ஓவர்களில் 121 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் வெறும் 3 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி த்ரில் வெற்றி பெற்றது.

இந்தத் தொடர் தோல்விகளின் காரணமாக, தொடரின் கடைசி இரண்டு இடங்களான 11 மற்றும் 12-வது இடங்களைத் தீர்மானிக்கும் போட்டியில் வங்கதேச அணியை இந்தியா எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

IND vs NZ: காஷ்மீர் பவுலர் ஆகிப் நபிக்கு ஜாக்பாட்.. 5 ஒருநாள் போட்டிகளுக்கான அணியிலும் சேர்ப்பு

IND vs NZ: காஷ்மீர் பவுலர் ஆகிப் நபிக்கு ஜாக்பாட்.. 5 ஒருநாள் போட்டிகளுக்கான அணியிலும் சேர்ப்பு

குருணால் பாண்டியா, டி.நடராஜன், நிதீஷ் ராணா, ஷஷாங்க் சிங் என ஐபிஎல் தொடரில் கலக்கும் முன்னணி இந்திய நட்சத்திரங்கள் பலர் அணியில் இருந்தும், ஒரு போட்டியில் கூட ஜெயிக்க முடியாமல் இந்தியா அடுத்தடுத்து தோற்றது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Saturday, October 31, 2026, 11:26 [IST]
Other articles published on Oct 31, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+