Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆடுகளத்தை தவறாக கணித்தோம்.. கடைசி ஓவர் எல்லாத்தையும் மாற்றிவிட்டது.. ஹர்திக் பாண்டியா பேச்சு

ராஞ்சி : நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

நியூசிலாந்து அணி 19 ஓவர் வரை 149 ரன்கள் மட்டுமே அடித்த நிலையில் கடைசி ஓவரில் 27 ரன்களைக் குறித்து 176 எண்களை சேர்த்தது.

இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி 15 ரன்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாற 20 ஓவர் முடிவில் 155 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஆச்சரியம்

ஆச்சரியம்

இதில் வாஷிங்டன் சுந்தர் 28 பந்தில் அரை சதம் அடித்தார். இந்த நிலையில் தோல்வி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா, ஆடுகளம் எவ்வாறு செயல்படும் என்று யாருமே கணிக்கவில்லை. இரண்டு அணிகளுமே ஆடுகளம் செயல்பட்டது குறித்து ஆச்சரியம் தான் அடைந்தோம். நியூசிலாந்து எங்களை விட சிறப்பாக கிரிக்கெட் விளையாடியது.

சிறப்பாக செயல்பட்டார்கள்

சிறப்பாக செயல்பட்டார்கள்

அதனால் தான் அவர்கள் இன்று வெற்றி பெற்றார்கள். பழைய பந்தை விட புதிய பந்து நன்றாக ஆடுகளத்தில் திரும்பியது. சுழற் பந்துவீச்சு திரும்பிய விதமும் பவுன்ஸ் ஆன விதமும் எனக்கு ஆச்சரியத்தை உண்டாக்கியது. நாங்கள் முதலில் ரன்கள் கொடுத்தாலும் பிறகு சிறப்பாக செயல்பட்டு ஆட்டத்தில் ஆதிக்கத்தை செலுத்தினோம். நானும் சூரியகுமார் யாதவும் பேட்டிங் செய்யும் வரை இலக்கை எட்டி விடலாம் தான் என்று நினைத்தோம்.

கூடுதல் ரன்கள்

கூடுதல் ரன்கள்

நாங்கள் பந்துவீச்சில் கடைசி கட்டத்தில் மிகவும் மோசமாக செயல்பட்டோம். கூடுதலாக 25 ரன்கள் கொடுத்தது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. எங்களுடைய பந்துவீச்சாளர்கள் இளம் வீரர்களாக இருக்கிறார்கள்.

இதனால் அவர்கள் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக் கொள்வார்கள் என்று நான் நினைக்கிறேன்.வாஷிங்டன் சுந்தர் இன்றைய ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டார்.

பாராட்டு

பாராட்டு

வாசிங்டன் பந்து வீசிய விதம் ,பேட்டிங் செய்த விதம், பில்டிங் செய்த விதம் அனைத்துமே நாங்கள் எதிர்பார்த்தது போல் அமைந்தது. வாஷிங்டன் சுந்தர் போல் ஒரு ஆல் ரவுண்டரை தான் நாங்கள் தேடிக் கொண்டிருக்கிறோம். அவருடைய இன்றைய செயல்பாடு எங்களுக்கு நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. நிச்சயம் எதிர்காலங்களில் வாஷிங்டன் சுந்தர் ஆட்டம் எங்களுக்கு முக்கியத்துவமாக இருக்கும்.

Story first published: Friday, January 27, 2023, 23:39 [IST]
Other articles published on Jan 27, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+