Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஸ்ரேயாஸ் ஐயரை விட இவருக்கு தான் கேப்டனாக நிறைய தகுதி இருக்கு.. சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விவாதம்

மும்பை: இந்திய டி20 அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை விட குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில்லே நீண்ட கால அடிப்படையில் சிறந்த தேர்வாக இருந்திருப்பார் என்று முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்களுக்கான இந்திய அணியின் புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரை பிசிசிஐ அறிவித்தது.

இது குறித்து சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் தொலைக்காட்சியில் பேசிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர், "ஸ்ரேயாஸ் ஐயரின் தேர்வு மிகவும் சுவாரசியமானது. கடந்த சில மாதங்களாக அவர் இந்திய டி20 அணியிலேயே இடம்பெறவில்லை, ஆனால் இப்போது நேரடியாக அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். எனது பார்வையில், சுப்மன் கில்லுக்கு ஸ்ரேயாஸ் ஐயரை விட சிறந்த தகுதிகள் உள்ளன" என்றார்.

India T20 Captaincy Sanjay Manjrekar Prefers Shubman Gill Over Shreyas Iyer for India T20I Captaincy

சுப்மன் கில் கேப்டனாகத் தேர்வு செய்யப்படாததற்கான காரணம் குறித்துப் பேசிய மஞ்ச்ரேக்கர், "இந்திய அணியின் விளையாடும் லெவனில் எளிதாக இடம் பிடிக்கக்கூடிய ஒரு வீரரையே கேப்டனாகத் தேர்வு செய்ய பிசிசிஐ விரும்பியுள்ளது. துவக்க வீரராகக் களம் இறங்கும் கில்லுக்கு தற்போது இந்திய அணியில் கடும் போட்டி நிலவுகிறது.

குறிப்பாக, 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி போன்ற துவக்க வீரர்கள் வந்துவிட்டதால், கில்லுக்கு விளையாடும் லெவனில் இடம் உறுதி செய்யப்படவில்லை. அதே நேரத்தில், ஸ்ரேயாஸ் ஐயரை நடுத்தர வரிசையில் எளிதாகச் சேர்க்க முடியும் என்பதால் அவருக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது" என்று விளக்கினார்.

மேலும், எதிர்காலத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற கடினமான வெளிநாட்டு மைதானங்களில் விளையாட வேண்டியிருப்பதால், அந்தச் சூழலுக்கு கில்லின் ஆட்டமுறை சிறப்பாகப் பொருந்தும் என்றும் அவர் கூறினார்.

வைபவ் சூர்யவன்ஷி ஆடும் இந்தியா ஏ முத்தரப்பு ஒருநாள் தொடர் எப்போது? லைவ் மேட்ச் பார்ப்பது எப்படி?

வைபவ் சூர்யவன்ஷி ஆடும் இந்தியா ஏ முத்தரப்பு ஒருநாள் தொடர் எப்போது? லைவ் மேட்ச் பார்ப்பது எப்படி?

ஐபிஎல் தொடர்களில் ஸ்ரேயாஸ் ஐயர் 2024 இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார். 2025 இல் பஞ்சாப் கிங்ஸ் அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார். ஆனால், இந்த மூன்று சீசன்களிலும் பேட்டிங்கில் ஸ்ரேயாஸை விட சுப்மன் கில் அதிக ரன்களைக் குவித்துள்ளார். மேலும் குஜராத் அணியை இரண்டு முறை பிளே-ஆஃப் சுற்றுக்கு கில் அழைத்துச் சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கில்லுக்கு விரைவில் கேப்டன் வாய்ப்ப்ப்பு கிடைக்கும் என்றும் மஞ்ச்ரேக்கர் கூறி இருக்கிறார்.

Story first published: Sunday, June 7, 2026, 15:36 [IST]
Other articles published on Jun 7, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+