கம்பேக் கொடுத்த நடராஜன்.. சூர்ய குமாருக்கு டிக் அடித்து ஷாக் தந்த கோலி.. இந்திய டி 20 அணி அறிவிப்பு!
சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான டி 20 தொடருக்கான அணி தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மிக நீண்ட கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இங்கிலாந்திற்கு எதிராக நடைபெற்று வரும் கிரிக்கெட் தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடந்து முடிந்து உள்ளது.
இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற்றது. இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வெற்றிபெற்றது.

அகமதாபாத்
கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகள், டி 20 தொடர் முழுக்க அகமதாபாத்தில் நடக்க உள்ளது. அதன்பின் புனேவில் 3 ஒருநாள் போட்டிகள் நடக்க உள்ளது.இங்கிலாந்துக்கு எதிரான டி 20 தொடருக்கான அணி தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

வாய்ப்பு
பல இளம் வீரர்களுக்கு இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஐபிஎல் தொடரில் நன்றாக ஆடிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. பல புதிய வீரர்கள் இந்திய அணியில் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து
இங்கிலாந்துக்கு எதிராக அறிவிக்கப்பட்ட டி 20 இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ராகுல், ஷிகர் தவான், சூர்யா குமார், ஹர்திக் பாண்டியா, பண்ட் , இஷான் கிஷான், சாகல், வருண் சக்கரவர்த்தி, அக்சர் பட்டேல், வாஷிங்க்டன் சுந்தர், ராகுல் திவாதியா ஆகியோர் அணியில் உள்ளனர்.

நடராஜன்
அதேபோல் நடராஜன், புவனேஷ்வர் குமார், தீபக் சாகர், சைனி , ஷரத்துல் தாக்கூர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய அணியில் மீண்டும் நடராஜன் இணைந்துள்ளார். அதேபோல் தமிழக வீரர்கள் வாஷிங்க்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி ஆகியோரும் இணைந்துள்ளனர்.

யார் உள்ளனர்?
இந்திய அணியில் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் ஆகியோர் இணைந்துள்ளனர். சூர்ய குமார் யாதவ் மற்றும் கோலிக்கு மோதல் இருந்த நிலையில், சூர்ய குமாருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பல வருட எதிர்பார்ப்பிற்கு பின் சூர்ய குமார் யாதவ் இந்திய அணியில் முதல்முறை வாய்ப்பு பெற்றுள்ளார்.


Click it and Unblock the Notifications