Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலககோப்பை: இந்திய அணியின் முதல் லீக் போட்டி.. பிளேயிங் XI எப்படி இருக்கும்? பார்த்தீவ் பதில்

மும்பை: 2026 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பையில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, தங்களுடைய முதல் லீக் போட்டியை அமெரிக்காவுக்கு எதிராக விளையாடுகிறது. இதில் இந்திய அணியின் தொடக்கப் போட்டிக்கான பிளேயிங் லெவன் அணியை முன்னாள் கிரிக்கெட் வீரர் பார்த்தீவ் பட்டேல் தேர்வு செய்துள்ளார். ஹர்ஷித் ரானாவை அணியில் சேர்க்காத அவர், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரை தனது முதன்மை வேகப்பந்து வீச்சாளர்களாகத் தேர்ந்தெடுத்துள்ளார்.

இந்த டி20 உலகக் கோப்பை 2026, பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ளது. இவர்களின் போட்டிப் பயணம், போட்டிகளின் முதல் நாளிலேயே மும்பையில் அமெரிக்காவிற்கு எதிராகத் தொடங்குகிறது.

இது குறித்து பேசிய பார்த்தீவ் பட்டேல், "எனது முதல் ஆட்டத்திற்கான பிளேயிங் லெவன் அணி அபிஷேக் ஷர்மா மற்றும் இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா (3 மற்றும் 4 ஆம் இடத்தில்), பின்னர் சிவம் தூபே, ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங் மற்றும் அக்சர் படேல் ஆகியோரைக் கொண்டிருக்கும்," என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர், "அடுத்து அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் வருண் சக்ரவர்த்தி. இதுதான் எனது பிளேயிங் லெவன். அர்ஷ்தீப் சிங் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா இருவரையும் நான் சேர்க்க விரும்புகிறேன்," என தனது தேர்வு குறித்து விளக்கமளித்தார். இதன் மூலம் ஹர்ஷித் ரானா போன்ற வீரர்கள் அவரது அணியில் இடம்பெறவில்லை என்பதும் தெளிவாகிறது.

இந்தியாவின் 15 பேர் கொண்ட டி20 உலகக் கோப்பை 2026 அணியில் ஹர்ஷித் ரானா, குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் மற்ற நான்கு வீரர்களுக்கு பிளேயிங் லெவனில் பார்த்தீவ் பட்டேல் இடம்தரவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விலா எலும்பு காயம் அடைந்த வாஷிங்டன் சுந்தர், இந்த போட்டிக்கு ஆரம்பம் முதல் உடற்தகுதியுடன் இருப்பாரா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.

இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சனுக்கு இடையே யாரைத் தேர்வு செய்வார் எனக் கேட்கப்பட்ட போது, பார்த்திவ் படேல் இஷான் கிஷனின் பெயரைத் தேர்ந்தெடுத்தார். அவர், "இஷான் கிஷன் மிகச் சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்கிறார். கடந்த போட்டியிலும், பயிற்சிப் போட்டியிலும் விக்கெட் கீப்பிங் செய்வார். உலகக் கோப்பை தொடங்கும் போது ஃபார்மில் உள்ள வீரர் அணியில் வேண்டும். அணி தேர்வு நடக்கும் போது, இந்தியா இஷான் கிஷனைச் சேர்த்தாக வேண்டும்," என்றார்.

குஜராத் டைட்டன்ஸ் (GT) உதவிப் பயிற்சியாளர் பார்த்திவ் படேல், காயத்திலிருந்து மீண்டவுடன் திலக் வர்மா ஆடும் லெவனில் இடம்பெறுவார் எனத் தெரிவித்தார். அவர், "கடந்த ஒன்றரை வருடங்களாக டி20 வடிவத்தில் இந்தியாவின் பல்வேறு நிலைகளில் அவர் விளையாடிய விதம் மற்றும் சிறப்பான செயல்பாடுகளைப் பார்க்கையில், உடற்தகுதியடைந்தவுடன் இந்திய அணியின் பிளேயிங்லெவனில் இடம்பிடிப்பார்" என்றார்.

திலக் வர்மா இதுவரை 37 டி20ஐ இன்னிங்ஸ்களில் 144.09 ஸ்ட்ரைக் ரேட்டில் 1,183 ரன்கள் குவித்துள்ளார். 2025 ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றபோது, அவர் ஆட்டமிழக்காமல் 69 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

Story first published: Tuesday, February 3, 2026, 12:15 [IST]
Other articles published on Feb 3, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+