Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ZIM: இந்திய அணி பிளேயிங் லெவனில் என்ன மாற்றம் செய்யனும்? கவாஸ்கர் கருத்து

மும்பை: டி20 உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இந்த சூழலில் வாழ்வா? சாவா? என்ற கட்டத்தில் உள்ள இந்திய அணி, அடுத்த ஜிம்பாப்வேயை எதிர்கொள்ள உள்ளது. அந்தப் போட்டியில் முக்கிய மாற்றங்களை செய்ய வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறியுள்ளார்.

முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 28 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்த அர்ஷ்தீப் சிங்கை நீக்கி, அக்சர் படேலைச் சேர்க்க முதலில் பரிந்துரைத்தார். ஜிம்பாப்வே அணியில் இடது கை பேட்ஸ்மேன்கள் அதிகம் இல்லாததால், "அர்ஷ்தீப் சிங்குக்கு பதிலாக அக்சரை சேர்க்கலாம்," என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.

எனினும், அர்ஷ்தீப் சிறப்பாக ஆடியதால், "அதே அணியுடன் எந்த மாற்றமும் இல்லாமல் தொடரலாம்," என்றும் அவர் ர் தெரிவித்தார். டாப் ஆர்டர் பேட்டிங் முக்கிய கவலையாக உள்ளதால், தொடக்க ஆட்டக்காரர் ஜோடியை மாற்றுவது அவசியம். ஃபார்ம் அவுட்டில் உள்ள அபிஷேக் ஷர்மா அல்லது திலக் வர்மாவை நீக்கி, சஞ்சு சாம்சனை கொண்டு வரலாம்.

ஆனால், அர்ஷ்தீப்பை நீக்கி, அக்சரை சேர்ப்பது டாப் ஆர்டர் சிக்கல்களைத் தீர்க்காது, மாறாக பந்துவீச்சு வலிமையைக் குறைக்கும். 20 ஓவர் ஆட்டத்திற்கு ஒன்பதாவது பேட்ஸ்மேனால் பெரிய பலனில்லை. அக்சருக்குப் பதிலாக விளையாடிய வாஷிங்டன் சுந்தர் 11 பந்துகளில் 11 ரன்கள் மற்றும் விக்கெட் இல்லாத இரண்டு ஓவர்களுடன் சோபிக்கவில்லை. இவரை நீக்கப்படவும் வாய்ப்புள்ளது.

இறுதியாக, குல்தீப் யாதவ்வைச் சேர்க்கும்போது, ஹர்திக் பாண்டியா மற்றும் சிவம் தூபே ஆகியோர் கூடுதல் பந்துவீச்சுப் பொறுப்பில் சிறப்பாக செயல்பட வேண்டும். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முறையே 11.20 மற்றும் 16 என்ற எக்னாமியுடன் அவர்கள் நம்பிக்கையை அளிக்கவில்லை என்பதை அணி நிர்வாகம் கருத்தில் கொள்ள வேண்டும்.

Story first published: Tuesday, February 24, 2026, 12:15 [IST]
Other articles published on Feb 24, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+