Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

T20 WC: பைனலில் இந்திய அணியில் இந்த 2 வீரர்களை கொண்டு வரனும்.. தோனி போல் முடிவு எடுப்பாரா கம்பீர்?

மும்பை: டி20 உலக கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 253 ரன்கள் குவித்தும் வெறும் ஏழு ரன்கள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றிருக்கிறது.இது இந்திய அணியின் பந்துவீச்சு படு மோசமாக இருப்பதை காட்டி இருக்கிறது.

இந்த தொடரில் இந்திய அணி பந்துவீச்சின் மோசமாகவே செயல்பட்டு இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 195 ரன்கள் இந்தியா அடிக்கிவிட்டது. அது மட்டுமில்லாமல் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இந்திய அணி 184 ரன்கள் விட்டுக் கொடுத்தது. இதேபோன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 187 ரன்கள் இந்தியா விட்டுக் கொடுத்தது.

அது மட்டுமில்லாமல் நெதர்லாந்து அணிக்கு எதிராக அகமதாபாத் மைதானத்தில் 176 ரன்களை இந்தியா விட்டுக் கொடுத்திருக்கிறது. தற்போது மீண்டும் அகமதாபாத் மைதானத்தில் தான் இறுதிப்போட்டி நடைபெற இருக்கிறது. நெதர்லாந்துக்கு எதிராகவே 176 ரன்களை விட்டுக் கொடுத்தால் நியூசிலாந்துக்கு எதிராக எவ்வளவு ரன்களை விட்டுக் கொடுக்கும் என்ற கலக்கம் ரசிகர்கள் மத்தியில் தற்போது ஏற்பட்டு இருக்கிறது.

இதனால் பந்துவீச்சு படையில் நிச்சயம் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுபோல் இறுதிப்போட்டியில் எப்போதுமே பிளேயிங் லெவனில் ஏதேனும் ஒரு வீரருக்கு காயம் அடையாத பட்சத்தில் எந்த மாற்றமும் நிகழாது. ஆனால் இந்திய அணி பந்துவீச்சில் மிகப்பெரிய ஒரு குறை இருப்பதால் பௌலிங் படையை மாற்றியே ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் சூரியகுமார் யாதவும் இருக்கின்றார்.

குறிப்பாக ஆர்ஸ்தீப் சிங் நேற்றைய ஆட்டத்தில் நான்கு ஓவர்கள் வீசி 51 ரன்களையும், வருண் சக்கரவர்த்தி நான்கு ஓவர்கள் வீசி 64 ரன்கரையும் விட்டுக் கொடுத்து இருக்கிறார்கள். இருவரும் தலா ஒரு விக்கெட்டை எடுத்து இருந்தனர். இந்த இரண்டு வீரர்களையும் மாற்றி ஆர்ஸ்தீப் சிங் பதிலாக நட்சத்திர வீரர் முகமது சிராஜையும் வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக குல்தீப் யாதவையும் அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோனி, ஸ்ரீ சாந்தை உள்ளே கொண்டு வந்தார். அப்போது நெஹ்ராவுக்கு காயம் ஏற்பட்டு இருந்ததை அடுத்து இந்த மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் பலரும் அஸ்வினை உள்ளே கொண்டு வந்திருக்க வேண்டும் என்றும் ஃபார்மில் இல்லாத ஸ்ரீஷாந்தை ஏன் கொண்டு வந்தீர்கள் என்றும் கேள்விகளை எழுப்பினர்.

அதுமட்டுமில்லாமல் ஆர்ஸ்தீப் சிங் விட சிராஜ் அனுபவம் வாய்ந்த வீரராக இருக்கின்றார். கடந்த டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் கூட அவர் விளையாடியிருக்கிறார். இதனால் சிராஜுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதுபோன்று சுழற் பந்துவீச்சில் குல்தீப்பையும் அணிக்குள் கொண்டு வர ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Story first published: Friday, March 6, 2026, 12:53 [IST]
Other articles published on Mar 6, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+