Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட்.. புஜாராவின் தரமான இன்னிங்ஸ்.. வலுவான நிலையில் இந்தியா

எட்ஜ்பாஸ்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது.

India takes a huge lead in 5th test vs England

முதல் இன்னிங்சில் இந்திய அணி 416 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனைத் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 84 ரன்களுக்கு 5 விக்கெட் என்ற ஸ்கோருடன் 3வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது.

பாரிஸ்டோ மட்டும் தனி ஆளாக போராடி சதம் விளாசினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து 132 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கியது. சுப்மான் கில் 4 ரன்களில் ஆட்டமிழக்க, விஹாரி 11 ரன்களில் வெளியேறினார். இதனையடுத்து, புஜாரா, கோலி ஜோடி 3வது விக்கெட்டுக்கு பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். விராட் கோலி 20 ரன்களில் வெளியேறினார்.

இதனையடுத்து ரிஷப் பண்ட் களத்துக்கு வந்து வழக்கம் போல் அதிரடியாக விளையாட, மறுமுனையில் நிதானமாக விளையாடிய புஜாரா அரைசதம் அடித்தார். ரிஷப் பண்ட் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்., 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 125 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.

தற்போது இங்கிலாந்தை விட இந்திய அணி 257 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நாளை 2 செஸன்ஸ்கள் இந்தியா விளையாடி கூடுதலாக ஒரு 200 ரன்களை சேர்த்தால், எஞ்சியுள்ள 4 செஸன்களில் இங்கிலாந்தின் 10 விக்கெட்டுகளை எடுக்க, இந்தியாவுக்கு நிறைய நேரம் கிடைக்கும். தற்போது ஆட்டம் மெல்ல மெல்ல இந்தியா பக்கம் உள்ளது.

Story first published: Sunday, July 3, 2022, 23:48 [IST]
Other articles published on Jul 3, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+