பிரேக் கொடுத்த தமிழக வீரர்.. மாயம் நிகழ்த்திய சிராஜ்.. திணறும் ஆஸி. பேட்ஸ்மேன்கள்.. டிவிஸ்ட்!
சிட்னி: இந்தியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி திணறி வருகிறது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. போட்டி முடியும் நாளை ஒருநாள் மட்டுமே இருக்கும் நிலையில் எந்த அணி பார்டர் கவாஸ்கர் கோப்பையை தக்க வைக்கும் என்று கேள்வி நிலவி வருகிறது.
நான்காவது டெஸ்டில் இந்தியாவிற்கு எதிராக டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 369 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் இளம் பவுலிங் படையில் நடராஜன் 3 விக்கெட், வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட், ஷரத்துல் தாக்கூர் 3 விக்கெட், சிராஜ் ஒரு விக்கெட் எடுத்தனர்.

பேட்டிங்
இந்த நிலையில் நேற்று இந்திய அணி பேட்டிங்கிலும் கலக்கியது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மோசமாக ஆடி சொதப்பினாலும் இந்திய அணியின் இரண்டு ஆல் ரவுண்டர் ஷரத்துல் தாக்கூர், வாஷிங்க்டன் சுந்தர் தங்கள் பார்ட்னர்ஷிப் மூலம் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர். இந்திய அணிக்காக இவர் 120+ பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

பார்ட்னர்ஷிப்
இதனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 336 ரன்கள் எடுத்தது. முதல் இன்னிங்சில் 33ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. இன்று தொடக்கத்தில் டேவிட் வார்னர், மார்கஸ் ஹாரிஸ் அதிரடியாக ஆடினார்கள். ஆனாலும் அடுத்தடுத்து வரிசையாக விக்கெட் விழ ஆஸ்திரேலியா சரிவை சந்தித்தது.

சிராஜ்
வார்னர் விக்கெட்டை சுந்தர் வீழ்த்த, ஷரத்துல் தக்கூர் ஓவரில் மார்கஸ் ஹாரிஸும் அவுட் ஆனார். அதன்பின் சிராஜ் வீசிய ஒரே ஓவரில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை ஆஸ்திரேலிய அணி பறிகொடுத்தது. இதனால் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டை இழந்து 149 ரன்கள் எடுத்துள்ளது.

எத்தனை
இந்தியாவை விட ஆஸ்திரேலியா 182 ரன்கள் கூடுதலாக எடுத்துள்ளது. களத்தில் ஸ்மித் மற்றும் கேமரூன் கிரீன் உள்ளனர். நாளை பிரிஸ்பானில் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இந்த டெஸ்ட் போட்டி டிராவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications