Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே போட்டியில் வெளியே அனுப்பப்பட்ட இந்திய வீரர்.. வெஸ்ட் இண்டீஸ்க்கு திரும்பிய அதிரடி வீரர்

மும்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியை வென்று தொடரை கைப்பற்றும் உத்வேகத்துடன் இந்திய அணி கடைசி போட்டியில் வென்றுள்ளது.

Recommended Video

TNPL 2022 Salem Cricket Ground எப்படி இருக்கு? | Sanga's Cricket Wrap *Cricket

குயின்1 பார்க் ஓவல் மைதானத்தில், கடந்த 2007ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் இலங்கையிடம் இந்தியா தோல்வி அடைந்தது.

அதன் பிறகு நடைபெற்ற அனைத்து போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியை ஓயிட் வாஷ் செய்யும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.

டாஸ்

டாஸ்

கடைசியாக நடைபெற்ற 2 போட்டியிலும், பேட்டிங்கிற்கு சாதகமான சூழலே இருந்தது. இந்த நிலையில், நடப்பு தொடரில் முதல் முறையாக டாஸ் வென்ற தவான், மகிழ்ச்சியில் கைத் தட்டி பேட்டிங் செய்வதாக அறிவித்தார். ரன் குவிப்புக்கு சாதகமாக மைதானம் இருப்பதால், முதலில் பேட்டிங் செய்து, பெரிய இலக்கை நிர்ணயிக்க முயற்சி செய்வோம் என்று தெரிவித்தார்.

டிராவிட் அறிவுரை

டிராவிட் அறிவுரை

சீனியர்கள் இல்லாத நிலையில், இளம் வீரர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி கொண்டதாக தவான் பாராட்டினார். மேலும், ரன் குவிப்புக்கு சாதகமாக இருப்பதால், வெறுமனே அதிரடியாக ஆட கூடாது. அறிவை பயன்படுத்தி விளையாட வேண்டும் என்று டிராவிட் தங்களுக்கு அறிவுரை வழங்கி இருப்பதாக அவர் கூறினார்.

அதிரடி நீக்கம்

அதிரடி நீக்கம்

மேலும், இன்றைய ஆட்டத்தில் ஆவேஷ் கான் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா கொண்டு வரப்பட்டுள்ளார். இதே போன்று ஜடேஜாவுக்கு இன்றைய ஆட்டத்திலும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியை பொறுத்தவரை நட்சத்திர வீரர் ஜேசன் ஹோல்டர் அணிக்கு திரும்பியுள்ளார்.

பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

1, ஷிகர் தவான், 2, சுப்மான் கில், 3, சூர்ய குமார் யாதவ், 4, ஸ்ரேயாஸ் ஐயர், 5, சஞ்சு சாம்சன், 6, தீபக் ஹூடா, 7, அக்சர் பட்டேல், 8, சர்துல் தாக்கூர் 9, முகமது சிராஜ், 10, பிரசித் கிருஷ்ணா, 11, சாஹல்

Story first published: Wednesday, July 27, 2022, 19:07 [IST]
Other articles published on Jul 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+