Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது யாரும் எதிர்பார்க்காத அதிரடி.. இந்திய அணியின் துணை கேப்டனே நீக்க முடிவு.. என்ன காரணம் ?

ஹாமில்டன் : நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அதிரடி முடிவை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

அதாவது கேப்டன் மற்றும் துணை கேப்டன்கள் எப்போதும் பிளேயிங் லெவனில் இருப்பார்கள். உங்களுக்கு இந்த பதவி கிடைத்தாலே நீங்கள் எவ்வளவு சொதப்பினாலும் அணியில் நீங்கள் இருப்பீர்கள் என்று அர்த்தம்.

காயம் அடைந்தால் மட்டுமே உங்களுக்கு பதிலாக வேறு வீரர் அணியில் சேர்க்கப்படுவார்.

 தடுமாறும் பண்ட்

தடுமாறும் பண்ட்

இந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரிஷப் பந்த் 23 பந்துகளை எதிர் கொண்டு 15 ரன்கள் அடித்தார். இதில் இரண்டு பவுண்டரிகள் மட்டும் அடங்கும். ரிஷப் பண்ட் பேட்டிங் செய்யும்போது அவர் தடுமாறியது நன்றாகவே தெரிந்தது. ரிஷப் பண்ட்க்கு தற்போது உத்வேகம் இன்றி காணப்படுகிறார்.

தோல்விக்கு காரணம்

தோல்விக்கு காரணம்

ரிஷப் பண்டிடம் இருந்த பழைய நெருப்பு மாதிரியான் ஆட்டம் அவருடைய பேட்டிங்கில் கடந்த மாதங்களாக தெரியவில்லை. இந்த நிலையில் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோற்றத்திற்கு காரணம் தீபக் ஹூடா போன்ற கூடுதல் சுழற் பந்துவீச்சாளுடன் களமிறங்காததே என்று பலரும் குற்றச்சாட்டு வருகின்றனர். சஞ்சு சாம்சனையும், ரிஷப் பண்டையும் பிளேயிங் லெவனில் சேர்த்ததால் தான் தீபக் ஹூடாவுக்கு இடம் கிடைக்காமல் போனது.

 அதிரடி நீக்கம்

அதிரடி நீக்கம்

இதன் காரணமாக இந்திய அணி தோல்வி அடையும் நிலையில் ஏற்பட்டது. தற்போது இரண்டாவது ஒருநாள் போட்டியில் வென்றே தீர வேண்டும் என்பதால் லட்சுமன் அதிரடி முடிவை எடுக்க உள்ளார். அதன்படி பேட்டிங்கில் தடுமாறி வரும் ரிஷப் பண்ட்க்கு ஓய்வு வழங்கப்பட்டு அந்த இடத்தில் ஆல்ரவுண்டர் தீபக் ஹூடாவை களம் இறக்க முடிவெடுத்துள்ளார். இதன் காரணமாக நாளை ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 துணை கேப்டன் யார்?

துணை கேப்டன் யார்?

சஞ்சு சாம்சன் கடந்த தென்னாப்பிரிக்கா தொடரில் அதிரடியாக விளையாடி ரசிகர்களின் கவனத்தை பெற்றார். நேற்றைய முதல் ஒருநாள் போட்டியிலும் 36 ரன்கள் சஞ்சு சாம்சன் குவித்தார். இதன் காரணமாக இந்திய அணியின் துணை கேப்டன் என்று அறிவிக்கப்பட்ட ரிஷப் பண்டை அதிரடியாக நீக்கும் முடிவை லக்ஷ்மணன் தவானும் எடுத்துள்ளனர். நாளை ரிஷப் பண்ட் நீக்கப்பட்டால் அந்தத் துணை கேப்டன் பதவி ஸ்ரேயாஸ் ஐயருக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Saturday, November 26, 2022, 22:08 [IST]
Other articles published on Nov 26, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+