இந்திய கிரிக்கெட் அணி வரும் மார்ச் மாதம் வரை உள்நாட்டில் எந்த கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க போகிறது என்பதற்கான அட்டவணையை பிசிசிஐ அறிவித்துள்ளது.
அதன்படி இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் விளையாடி வருகிறது. அதனைத் தொடர்ந்து அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரும் ஆகஸ்ட் இறுதியில் ஆசிய கோப்பை தொடரும் நடைபெற உள்ளன.

ஆசிய கோப்பை முடிந்த பிறகு இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதன்படி செப்டம்பர் 22ஆம் தேதி முதல் ஒருநாள் போட்டி மொஹாலியிலும் செப்டம்பர் 24ஆம் தேதி இந்தூரில், இரண்டாவது ஒருநாள் போட்டியும் செப்டம்பர் 23ஆம் தேதி ராஜ்கோட்டில் மூன்றாவது ஒருநாள் போட்டியும் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து உலக கோப்பை நடைபெறும் நிலையில் அந்தத் தொடர் முடிந்தவுடன் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 தொடர் நடைபெறுகிறது.
இதில் நவம்பர் 23ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் முதல் டி20 போட்டியும், நவம்பர் 22ஆம் தேதி திருவனந்தபுரத்தில் இரண்டாவது டி20 போட்டியும், நவம்பர் 28ஆம் தேதி கவுஹாத்தியில் மூன்றாவது டி20 போட்டியும், டிசம்பர் ஒன்றாம் தேதி நாக்பூரில் நான்காவது டி20 போட்டியும், டிசம்பர் மூன்றாம் தேதி ஹைதராபாத்தில் ஐந்தாவது டி20யும் நடைபெறுகிறது.தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
அது முடிந்தவுடன் மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக உள்நாட்டில் ஜனவரி ஒன்றாம் தேதி மொஹாலியிலும் முதல் டி20 போட்டியும், ஜனவரி 14-ஆம் தேதி இந்தூரில் இரண்டாவது டி20 போட்டியிலும், ஜனவரி 17ஆம் தேதி பெங்களூருவில் மூன்றாவது டி20 போட்டியும் நடைபெறுகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இதில் ஜனவரி 25 ஆம் தேதி ஹைதராபாத்தில் முதல் டெஸ்ட்டும், பிப்ரவரி 2ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டியும், பிப்ரவரி 15ஆம் தேதி ராஜ்கோட்டில் மூன்றாவது டெஸ்ட் போட்டியும், பிப்ரவரி 23ஆம் தேதி ராஞ்சியில் நான்காவது டெஸ்ட் போட்டியும், மார்ச் 7ஆம் தேதி தர்மசாலாவில் ஐந்தாவது டெஸ்ட் போட்டியும் நடைபெறுகிறது. மும்பை, டெல்லி, சென்னை மற்றும் அகமதாபாத்தில் எந்த போட்டிகளும் ஒதுக்கப்படவில்லை.