Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸ்திரேலியா செல்லப் போவது யார் யார்?.. 19ம் தேதி இந்திய அணி தேர்வு

டெல்லி: ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணி வீரர்கள் வருகிற சனிக்கிழமை தேர்வு செய்யப்படவுள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் ஜனவரி 12ம் தேதி தொடங்கும் ஒரு நாள் போட்டித் தொடரில் இந்தியா பங்கேற்கவுள்ளது. இந்தத் தொடருக்கான அணித் தேர்வு சனிக்கிழமை நடைபெறும்.

டெல்லியில் இந்தத் தேர்வு நடைபெறவுள்ளது. ஹோட்டலில் நடைபெறும் இந்தத் தேர்வின்போது இந்திய அணியினரை தேர்வாளர் குழு தேர்வு செய்து அறிவிக்கும்.

டிசம்பர் 19ம் தேதி

டிசம்பர் 19ம் தேதி

இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில், அகில இந்திய தேர்வுக் குழு டிசம்பர் 19ம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணியளவில் டெல்லி ஹோட்டல் ஐடிசி மெளர்யாவில் கூடி அணித் தேர்வில் ஈடுபடும்.

வீரர்கள் தேர்வு

வீரர்கள் தேர்வு

இந்தக் கூட்டத்தின்போது ஆஸ்திரேலியா செல்லும் இந்திய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படுவார்கள் என்று பிசிசிஐ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 வார டூர்

3 வார டூர்

இது இந்தியாவின் குறுகிய கால தொடராக இருக்கும். 3 வாரமே இது நீடிக்கும். இதில் 5 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டுவென்டி 20 போட்டிகளில் இரு அணிகளும் மோதும்.

ஜனவரி 12 முதல்

ஜனவரி 12 முதல்

ஜனவரி 12ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை இந்த தொடர் நீடிக்கும். இந்தத் தொடரின்போது ஆஸ்திரேலியாவின் முக்கியமான மெல்போர்ன், சிட்னி, வாகா, அடிலைட் ஓவல் மற்றும் பிரிஸ்பேன் மைதானங்களில் போட்டி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு நாள் போட்டிகள்

ஒரு நாள் போட்டிகள்

முதல் ஒரு நாள் போட்டி ஜனவரி 12ம் தேதி பெர்த்தில் நடைபெறும். 15ம் தேதி 2வது போட்டி பிரிஸ்பேனிலும், 3வது போட்டி ஜனவரி 17ம் தேதி மெல்போர்ன் நகரிலும், ஜனவரி 20ம் தேதி நான்காவது போட்டி கான்பெராவிலும், 23ம் தேதி கடைசிப் போட்டி சிட்னியிலும் நடைபெறும்.

டுவென்டி 20 போட்டிகள்

டுவென்டி 20 போட்டிகள்

ஜனவரி 26ம் தேதி முதல் டுவென்டி 20 போட்டி அடிலைடிலும், 29ம் தேதி 2வது போட்டி மெல்போர்ன் நகரிலும், 31ம் தேதி 3வது போட்டி சிட்னியிலும் நடைபெறும்.

Story first published: Thursday, December 17, 2015, 15:05 [IST]
Other articles published on Dec 17, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+