Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விடுகதையா இந்த வாழ்க்கை..!! ஜூனியர்களுக்கு கீழ் விளையாடும் ரஹானே, புஜாரா..!! பிசிசிஐ அளித்த தண்டனை?

மும்பை: இந்திய கிரிக்கெட் அணிக்கே கேப்டனாக இருந்த ரஹானே, இன்று வேறு ஒரு இளம் வீரரின் தலைமையின் கீழ் ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாட உள்ளார்.

இதே நிலை தான் அணியின் நட்சத்திர வீரராக விளங்கும் புஜாராவுக்கும். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தவில்லை என்று இப்படி தான் நடக்கும் என்று தண்டனையை அளித்துவிட்டது பி.சி.சி.ஐ.

இதற்கு ரசிகர்கள் விடுகதையா இந்த வாழ்க்கை என்ற பாடல் போட்டு புரானே ஜோடியை ரசிகர்களை மீம்சாக கிண்டல் அடித்து வருகின்றனர்.

ரசிகர்கள் கிண்டல்

ரசிகர்கள் கிண்டல்

நல்லா வாழ்ந்த ஜமிந்தார் குடும்பம் போல், இந்திய அணிக்கு தேவையில்லாத சுமையாக கடந்த 2 ஆண்டுகள் புஜாராவும், ரஹானேவும் விளங்கியதாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இவர்களை மாற்றி இளம் வீரருக்கு வாய்ப்பு தாருங்கள் என பலமுறை கேட்டும், அணி நிர்வாகமும் அப்போதைய கேப்டனும் செவி சாய்க்கவில்லை.இதன் காரணமாக முக்கிய தென்னாப்பிரிக்க தொடரை இழந்து தனது கேப்டன் பதவியும் கோலி ராஜினாமா செய்துவிட்டதாக ரசிகர்கள் கூறுகின்றனர். ரசிகர்களின் விமர்சனம் எந்த அளவுக்கு உண்மை என்று நாம் பார்ப்போம்.

ரஹானே

ரஹானே

ரஹானே கடைசியாக சதம் அடித்தது டிசம்பர் 2020ஆம் தேதி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்ற டெஸ்டில் தான். ரஹானே கடந்த 27 இன்னிங்சில் 547 ரன்களே அடித்துள்ளார்.. இதில் சராசரியாக அவர் 20 ரன்கள் மட்டுமே அடித்தார். இதில் 3 அரைசதம் மட்டுமே அடங்கும்.இந்த கால கட்டத்தில் ரஹானேவின் ஒட்டுமொத்த சராசரி 43 இல்லிருந்து 39ஆக குறைந்தது. ரஹானே தற்போது 3 ஆண்டுகளுக்கு பிறகு ரஞ்சி கோப்பையில் மும்பை அணிக்காக பிரித்வி ஷா தலைமையில் விளையாட உள்ளார்.

புஜாரா

புஜாரா

புஜாரா கடைசியாக சர்வதேச கிரிக்கெட்டில் சதம் விளாசி 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. புஜாரவின் சராசரி வெறும் 27 ரன்களாக தான் உள்ளது. முக்கியமான போட்டிகளில் டக்காகி ரசிகர்களை வெறுப்படைய செய்துள்ளார். இந்த கால கட்டத்தில் புஜாராவின் சராசரி 47 லிருந்து 44 ஆக குறைந்துள்ளது. புஜாரா உனாட்கட் தலைமையில் சௌராஷ்டிரா அணிக்காக விளையாட உள்ளார்.

எல்லாம் நன்மைக்கே

எல்லாம் நன்மைக்கே

ஆனால், ரஞ்சி போட்டியில் விளையாடுவது அவ்வளவு ஏளனமான விஷயம் கிடையாது. சொல்ல போனால் சீனியர்கள் நேரம் கிடைக்கும் போது எல்லாம் ரஞ்சியில் விளையாட் வேண்டும். அப்போது தான் அவர்கள் சுய பரிசோதனை செய்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும். மற்ற இளம் வீரர்களுக்கும் அனுபவம் கிடைக்கும். சொல்லப்போனால் ரஞ்சியில் விளையாடினால் தான் டெஸ்டில் இடம் என்று விதி போட்டால் நன்றாக இருக்கும். புஜாரா, ரஹானே ஜோடி இந்த வாய்ப்பை பயன்படுத்தி மீண்டும் அணிக்கு திரும்ப வேண்டும் என்பதே உண்மையான கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

Story first published: Tuesday, February 8, 2022, 23:52 [IST]
Other articles published on Feb 8, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+