Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நியூசி.யை வெளுத்து வாங்கிய இந்திய அணி.. 65 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அபாரம்.. ஹூடா அபாரம் !

மவுண்ட் மாவுங்குனி : நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதன் மூலம் இந்திய அணி 1க்கு 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்தப் போட்டியில் சூர்யகுமார் யாதவ் சதம் விளாசி, சாதனை படைத்தார். இதன் மூலம் நடப்பாண்டில் அவர் 2வது சதத்தை விளாசி இருக்கிறார்.

டாஸ் வென்ற கேப்டன் வில்லியம்சன் ,முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து தொடக்க வீரராக களம் இறங்கிய இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி 36 ரன்கள் சேர்த்தார்.

சிக்சர் மழை

சிக்சர் மழை

எனினும் தொடக்க வீரராக ரிஷப் பண்ட் களமிறங்கினார். 13 பந்துகளை எதிர்கொண்ட அவர் 6 ரன்களில் அவுட்டாகி ரசிகர்களை ஏமாற்றினார். மழை நின்றாலும், சூர்யகுமார் யாதவின் சிக்சர் மழை பொழிய தொடங்கியது. மறுமுனையில், டி20 உலககோப்பையில் வாய்ப்பு கிடைக்காத ஸ்ரேயாஸ், இன்றைய ஆட்டத்தில் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்தார். 9 பந்துகளை எதிர் கொண்டு 13 ரன்கள் எடுத்த நிலையில், ஸ்ரேயாஸ் ஒரு தவறை செய்தார்.

சூர்யகுமார் சதம்

சூர்யகுமார் சதம்

ஒரு பவுண்டரையும் ,ஒரு சிக்சரும் அடித்த ஸ்ரேயாஸ் ஐயர் பேக் ஃபுட்டில் நின்று ஷாட் அடிக்க முயன்ற போது ஹிட் விக்கெட் ஆனார். எனினும் மறுமுனையில் வாண வேடிக்கை காட்டிய சூரியக்குமார் யாதவ் 49 பந்துகளில் சதம் விளாசினார். இதில் ஏழு இமாலய சிக்சர்களும் 11 பவுண்டரிகளும் அடங்கும் . நடப்பாண்டில் சூரியகுமார் யாதவ் விளாசிய இரண்டாவது சதம் இதுவாகும். கடைசி ஓவரில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா, வாசிங்டன் சுந்தர் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, டிம் சௌதி ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தினார். இதன் மூலம் இந்திய அணி 191 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்தது.

அடுத்தடுத்து ஆட்டமிழப்பு

அடுத்தடுத்து ஆட்டமிழப்பு

192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. எனினும் இந்திய அணி பந்துவீச்சாளர்கள் தொடக்கம் முதலேயே கட்டுக்கோப்பாக பந்துவீசி நெருக்கடி அளித்தனர். இதில் பெபியன் ஆலன் டக் அவுட்டாகி வெளியேற, கான்வே 25 ரன்களும், பிலிப்ஸ் 12 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர்.

இந்தியா அபாரம்

இந்தியா அபாரம்

நியூசிலாந்து அணி வீரர்களுக்கு சுழற்பந்துவீச்சாளர்களை வைத்து ஹர்திக் பாண்டியா நெருக்கடி அளித்தார். வில்லியம்சன் மட்டும் பொறுமையாக விளையாடி 52 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால், நியூசிலாந்து அணி 126 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. தீபக் ஹூடா 4 விக்கெட்டுகளையும், சாஹல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டனர்.

Story first published: Sunday, November 20, 2022, 16:37 [IST]
Other articles published on Nov 20, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+