
ஒரே டி20 போட்டி
கொழும்பில் நேற்று நடந்த, இரு அணிகளுக்கும் இடையேயான, ஒரே டி-20 போட்டியில், ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. இதன் மூலம், மொத்தம் 9-0 என, தொடர்கள் வெற்றியைக் கண்டது. முதல் முறையாக, இந்திய அணி இவ்வாறு தொடர்கள் வெற்றியைக் கண்டுள்ளது.

போர்
அதே நேரத்தில், இந்தியா பங்கேற்ற மற்ற தொடர்களைவிட இந்தத் தொடர் ரொம்ப போரடித்து விட்டது. கிட்டத்தட்ட சமபலமுள்ள அணிகளாக இந்தியாவும் இலங்கையும் இருந்தன. ஒவ்வொரு போட்டிக்கும் முன்பு, யார் ஜெயிப்பார்கள் என்ற பெரிய எதிர்பார்ப்புகள் இருக்கும். ஆனால், இந்த முறை, போனார்கள், பந்து வீசினார்கள், அடித்தார்கள், வென்றார்கள் என்று, ரொம்ப வாடிக்கையாக செய்வது போல் இந்திய விளையாடியது, ரொம்ப போரடித்து விட்டது.

அம்பயரே கொட்டாவி விட்டுட்டாப்டி
சரி, டெஸ்ட் மேட்ச். ஒன்டே மேட்ச்சில் தான் சுவாரசியம் இல்லாமல் இருந்தது, டி-20 போட்டியாவது விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்ப்போடு இருந்தால், அம்பயரே கொட்டாவி விடும் அளவுக்கு பரபரப்பு இல்லாமல், சப்பென்று முடிந்துவிட்டது.

சுரத்தே இல்லை
முதலில் இலங்கை அணி விளையாடியது. விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வெலா, 17 ரன்கள் எடுத்து சற்று நம்பிக்கை கொடுத்தார். அதன்பிறகு தில்ஷான் முனவீரா, 53 ரன்கள், அஷான் பிரியன்ஞன், 40 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் இழப்புக்கு, 170 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தனர். ஓவருக்கு 8.5 ரன்கள் சராசரி என்பது ரொம்ப கஷ்டமான இலக்கெல்லாம் கிடையாது.

மிச்சம் வச்சு
அதுவும் தற்போதுள்ள பார்மில், இந்திய அணிக்கு கஷ்டமில்லைதான். கடைசியில் நான்கு பந்துகள் மிச்சமிருக்கையில், 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.

அப்பாடா விட்டாங்கடா
கேப்டன் விராட் கோஹ்லி, 54 பந்துகளில், 82 ரன்களும், மணீஷ் பாண்டே, 36 பந்துகளில், 51 ரன்களும் எடுத்து வெற்றியை உறுதி செய்தனர். அப்பாடா, ஒரே ஒரு டி-20 போட்டியோடு முடிச்சிக்கிட்டோம் என, இலங்கை நிம்மதி பெருமூச்சு விட்டு கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











