For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வரலாற்று வெற்றியை பெற்ற இந்தியா.. இன்னிங்ஸ் தோல்வியை தழுவிய ஆஸி.. பேச்சுக்கு பதிலடி கொடுத்த ரோகித்

நாக்பூர் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1க்கு0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா செல்ல இன்னும் 2 வெற்றிகள் பெற்றால் போதுமானது. இந்த ஆடுகளம் பேட்டிங்கிற்கு எடுபடாமல் இருப்பதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் குற்றஞ்சாட்டியது.

இதற்கு இந்திய அணி வீரர்கள் தங்களது பேட்டிங் மூலம் பதிலடி கொடுத்தனர். இதனையடுத்து டாஸ் வென்ற அஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஏமாற்றிய கோலி

ஏமாற்றிய கோலி

இதில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 177 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதில் ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் களமிறங்கியது. இதில் கேஎல் ராகுல் மட்டும் தடுமாறினார். இந்திய அணி வீரர்கள் , கோலி, புஜாரா ஆகியோர் தேவையில்லாத ஷாட் ஆடி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

பதிலடி

பதிலடி

எனினும் மறுமுனையில் கேப்டன் ரோகித் சர்மா அபாரமாக விளையாடி கேப்டனாக தனது முதல் சதத்தை அடித்தார். ஒரு கட்டத்தில் இந்தியா பெரிய லீட் எடுக்குமா என்று ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் ஜடேஜா, அக்சர் பட்டேல் ஜோடி பொறுமையாக விளையாடி அடுத்தடுத்து அரைசதம் அடித்தனர். 321 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் என்ற ஸ்கோருடன் இந்தியா 3வது நாள் ஆட்டத்தை இன்று தொடர்ந்தது.

இமாலய ஸ்கோர்

இமாலய ஸ்கோர்

இதில் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜடேஜா 70 ரன்களுக்கு ஆட்டமிழக்க, யாரும் எதிர்பாராத வகையில் முகமது ஷமி அதிரடியாக விளையாடி 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் அக்சர் பட்டேல் 84 ரன்கள் சேர்த்து போல்ட் ஆனார். இதன் மூலம் இந்திய அணி 400 ரன்கள் எடுத்தது. ஆடுகளம் மோசமாக இருப்பதாக ஆஸ்திரேலியா குற்றஞ்சாட்டியதற்கு, இந்திய பேட்ஸ்மேன்கள் தங்களுடைய கீழ் வரிசையை வைத்து பதிலடி கொடுத்தார்கள்.

சுருண்ட ஆஸி

சுருண்ட ஆஸி

223 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆஸ்திரேலிய அணி தங்களது 2வது இன்னிங்சில் விளையாடியது. முதல் இன்னிங்சை விட இரண்டாவது இன்னிங்சில் அஸ்வினுடைய பந்துவீச்சு மிகவும் அபாயகரமாக ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு இருந்தது. இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு எமனாக விளங்கும் அஸ்வின் தொடக்க வீரர்களான உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர் ஆகியோரின் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார்.

31வது முறையாக அஸ்வின்

31வது முறையாக அஸ்வின்

இதே போன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகின் முதல் நிலை வீரரான மார்னஸ் லாபஸ்சேனை 17 ரன்களில் ஜடேஜா தட்டி தூக்கினார். இதே போன்று மாட் ரீன்ஷா , பீட்டர் ஹான்ட்ஸ்கோம்ப் ஆகியோர் விக்கெட்டை அஸ்வின் பொறி வைத்து பிடித்தார். அலெக்ஸ் கேரி ஸ்விப் செய்து 2 பவுண்டரிகளை அடித்த நிலையில், அவரது விக்கெட்டையும் சாய்த்தார். இதன் மூலம் அஸ்வின் 31வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

இதே போன்று ஜடேஜா 2 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 2 விகெட்டுகளையும் கைப்பற்றினார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 91 ரன்களுக்கு சுருண்டது. இது இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா அணி அடித்த 2வது குறைந்தபட்ச ஸ்கோராகும். இதன் மூலம் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரில் முன்னிலை பெற்றது

Story first published: Saturday, February 11, 2023, 15:07 [IST]
Other articles published on Feb 11, 2023
English summary
India thrashes australia by innings victory in nagpur test
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+