இந்திய சுழலைக் கண்டு அஞ்சும் இங்கிலாந்து.. கை கொடுப்பாரா "மெர்லின்"??
Recommended Video

இரண்டாவது டி20 போட்டியில் இன்று மோதுகிறது இந்தியா இங்கிலாந்து- வீடியோ
கார்டிப்: இந்தியா - இங்கிலாந்து இடையிலான 2வது டி20 ஆட்டம் இன்று கார்டிப் நகரில் நடைபெறவுள்ளது.
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதலாவது டி20 ஆட்டத்தில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் இந்திய அணியின் இடது கை சுழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ், இங்கிலாந்து அணியை தனது ஸ்பின் பந்துவீச்சால் வீழ்த்தினார். அவர் டி20 போட்டிகளில் முதல் முறையாக 5 விக்கெட் வீழ்த்தியது மட்டுமின்றி இங்கிலாந்து அணியின் தோல்விக்கும் காரணமாக அமைந்தார்.
இந்திய பேட்ஸ்மேன் ராகுல் சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வெற்றி இங்கிலாந்து அணிக்கெதிரான 20 ஓவர் போட்டியில் இங்கிலாந்தில் கிடைத்த முதல் வெற்றியாகும்.
இரண்டாவது போட்டி கார்டிபில் இன்று இரவு நடைபெறவிருக்கிறது. இப்போட்டியில் வென்று தொடரை வெல்ல இந்திய அணியும், இப்போட்டியில் வென்று தொடரை சமன் செய்ய இங்கிலாந்து அணியும் கடுமையாக போராடும்.
இங்கிலாந்து அணியின் வலிமையான பேட்டிங் வரிசை, இந்திய அணியின் மணிக்கட்டு சுழல் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறுவது நமது பலம். ஆனால் முதல் போட்டியில் சாஹல் எதிர்பார்த்த அளவு சிறப்பாக பந்துவீசவில்லை. அவர் இன்று சிறப்பாக விளையாடி விக்கெட்களை வீழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியின் சுழல் பந்துவீச்சை சமாளிக்க இங்கிலாந்து அணியினர் "மெர்லின்" இயந்திரத்தை கொண்டு பயிற்சி செய்தது குறிப்பிடத்தக்கது. மெர்லின் என்பது ஒரு பந்துவீசும் இயந்திரம். இதன்மூலம் அவர்கள் சுழல் பந்துவீச்சை எதிர்கொள்ள பயிற்சி செய்து வருகின்றனர்.
முதல் போட்டியில் அடைந்த தோல்வியின் மூலம் இங்கிலாந்து அணி சுழல் பந்துவீச்சிக்கெதிராக சில திட்டங்களை தயார் செய்து இந்திய அணியை எதிர்கொள்ளும் என்பதில் ஐயமில்லை..!!
இங்கிலாந்து அணி கார்டிபில் இதுவரை தோல்வியை தழுவியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Friday, July 6, 2018, 15:17 [IST]
Other articles published on Jul 6, 2018


Click it and Unblock the Notifications