Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

‘தெளிவா சொல்லலயே‘.. இந்தியா - இலங்கை தொடர் அறிவிப்பு.. திடீர் ட்விஸ்ட்டால் ரசிகர்கள் ஷாக்!

மும்பை: இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கங்குலி அறிவித்த நிலையில் அதில் ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது.

Recommended Video

Srilanka-வுக்கு எதிரான Cricket தொடர்.. BCCI போடும் சூப்பர் திட்டம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்காக இந்திய அணி வரும் ஜூன் 2ம் தேதி இங்கிலாந்து செல்லவுள்ளது.

இதன் பின்னர் வரும் ஜூலை மாதம் இலங்கை அணிக்கு எதிரான தொடரிலும் இந்திய அணி பங்கேற்கும் என பிசிசிஐ தலைவர் கங்குலி இன்று அறிவித்திருந்தார்.

சுற்றுப்பயணம்

சுற்றுப்பயணம்

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில் ஜூலை மாதத்தில் இலங்கை அணியுடன் 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை முடித்துக்கொண்டு இந்திய அணி நேராக இலங்கை சென்றுவிட்டு பின்னர் மீண்டும் ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி தொடங்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு கிளம்பும் என எதிர்பார்க்கப்பட்டது.

திடீர் ட்விஸ்ட்

திடீர் ட்விஸ்ட்

இந்நிலையில் இலங்கை அணியுடன் ஆடப்போவது இந்தியாவின் 'பி' அணி என தெரியவந்துள்ளது. விராட் கோலி, ரோகித், பும்ரா போன்ற வீரர்கள் டி20 உலகக்கோப்பைக்கு கண்டிப்பாக தேவையான வீரர்கள். இவர்கள் ஓய்வின்றி அடுத்தடுத்த தொடர்களில் பங்கேற்க முடியாது.

என்ன காரணம்

என்ன காரணம்

இதுகுறித்து பிசிசிஐ வட்டாரங்களில் வெளியிட்டுள்ள தகவலில், அணியின் 'பி' வீரர்களும் உலகக்கோப்பைக்கு தயாராக இருக்க வேண்டும். ஜூலை மாதத்தை அதற்காக நன்றாக பயன்படுத்த விரும்பியே இப்படி ஒரு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சூப்பர் வாய்ப்பு

சூப்பர் வாய்ப்பு

இந்த போட்டி மூலம் இளம் வீரர்கள் சஞ்சு சாம்சன், இஷான் கிஷான், பிரித்வி ஷா, தேவ்தத் படிக்கல், ராகுல் டிவாட்டியா, ராகுல் சஹார், ஹர்ஷல் பட்டேல் போன்ற வீரர்கள் சர்வதேச போட்டிகளில் வாய்ப்பு பெறுவார்கள். மேலும் இதில் சிறப்பாக செயல்பட்டால் டி20 உலகக்கோப்பை அணியிலும் வாய்ப்பு கிடைக்கலாம். இவர்களை வழிநடத்த ஷிகர் தவான் போன்ற வீரர்களும் அணியில் சேர்க்கப்படலாம்.

Story first published: Monday, May 10, 2021, 17:13 [IST]
Other articles published on May 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+